காதலி இறந்த ஒரே வாரத்தில் சின்னத்திரை நடிகரும் தற்கொலை!

காதலி இறந்த சோகத்தில் சின்னத்திரை நடிகர் சந்திரகாந்த் என்கிற சந்து தற்கொலை செய்து கொண்டது சின்னத்திரை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக கன்னட சீரியல் நடிகை பவித்ரா எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் காலமானார். கர்நாடகாவைச் சேர்ந்த இவர் கன்னடம் மட்டுமல்லாமல் தெலுங்கு சீரியல்களிலும் நடித்துள்ளார்.

தெலுங்கில் ‘திரிநயனி’ என்ற சீரியலில் அவர் நடித்து வந்தார். இதே சீரியலில் அவருடன் நடித்த நடிகர் சந்திரகாந்த் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விபத்துக்குள்ளான பவித்ரா பயணித்த காரில் அவரது சகோதரி அபெக்ஷா, காதலர் சந்திரகாந்த், கார் டிரைவர் ஸ்ரீகாந்த் ஆகியோரும் பயணித்திருக்கின்றனர். ஹைதராபாத்தில் கார் விபத்து நடந்தபோது, சம்பவ இடத்திலேயே பவித்ரா பலியாகி இருக்க மற்றவர்கள் சிறுகாயங்களுடன் தப்பித்துள்ளனர்.

விபத்தில் இருந்து தேறி வந்து கொண்டிருந்த நிலையில், பவித்ராவின் இழப்பால் கடந்த சில நாட்களாக சோகத்தில் இருந்து வந்த சந்திரகாந்த், நேற்று அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பவித்ராவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் இருக்கிறது. ஆனால், முதல் திருமண உறவில் இருந்து பிரிந்து விட்டார். சந்திரகாந்தும் திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய திருமண உறவில் இருந்து பிரிந்தவர்கள் ‘திரிநயனி’ சீரியலில் ஒன்றாக நடித்தபோது இவர்களுக்குள் காதல் மலர்ந்திருக்கிறது. இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here