ஈப்போ:
பேராக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை சற்றுக் குறைவடைந்துள்ளது.
நேற்று மாலை 4 மணிக்கு 152 குடும்பங்களைச் சேர்ந்த 537 பேர் தங்கியிருந்த நிலையில், இன்று காலை 8 மணி நிலவரப்படி 163 குடும்பங்களைச் சேர்ந்த 529 பேராக குறைந்துள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பேராக்கின் லாரூட், மாடாங் மற்றும் செலாமா (LMS) ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள 10 தற்காலிக நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக பேராக் பேரிடர் செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.