நாடுமுழுவதுமுள்ள காவல் நிலையங்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும்

கோலாலம்பூர்:

உலு திராம் காவல் நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து , நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களின் பாதுகாப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று முன்னாள் ஜோகூர் பாரு துணை காவல்துறை தலைவர் டத்தோ அப்துல் அஜிஸ் பாக்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் உலு திராம் காவல் நிலையத்தில் மீண்டும் தாக்குதல் நிகழாமல் இருப்பதை உறுதிசெய்ய, கண்காணிப்பு அடிப்படையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் சொன்னார்.

“ஜோகூர் பாருவில் 1995 இல் நான் துணை காவல்துறை தலைவராக இருந்தேன். உலு திராம் காவல் நிலையக் கட்டிடத்தில் காவலர் பாதுகாப்புச் சாவடி இல்லை, இப்போது அங்கு மேம்பாலம் இருப்பதால், அது முற்றிலும் தெரியவில்லை.

அத்தோடு “அந்த காவல் நிலையத்தில் என்ன நடக்கிறது என்பது வெளியில் யாருக்கும் தெரியாது.

“எனவே உலு திராம் காவல் நிலையத்தின் பாதுகாப்பு உட்பட நாடுமுழுவதும் பாதுகாப்பு சிக்கல்கள் கொண்ட பிற காவல் நிலையங்களின் பாதுகாப்பையும் அதிகரிக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

இடது காவல் நிலையங்களின் முன்புறம் மற்றும் பின்புறம் காவலர் பாதுகாப்பு பணியிடங்களை மீண்டும் கொண்டு வர வேண்டும் அல்லது அனைத்து காவல் நிலையங்களையும் பாதுகாக்க நவீன பாதுகாப்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here