மோடி வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் சத்யராஜ்

பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிகர் சத்யராஜ் நடிக்க உள்ளதாக வெளியான தகவல் ரசிகர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னணி படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்று இப்படத்தை பெரும் பொருட்செலவில் தயாரிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சத்யராஜிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, தமக்கும் இது புதுச் செய்தி என்று கூறியுள்ளார்.

“வாய்ப்பு வந்தால் பின்னர் யோசிக்கலாம். நாத்திக கருத்துகளை அதிகம் பேசிய எம்.ஆர்.ராதா ஏகப்பட்டப் படங்களில் ஆன்மிகவாதியாக நடித்துள்ளார்,” என்று சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்துள்ளார் சத்யராஜ். மேலும், பெரியாரின் கருத்துகளையும் ஆதரித்துப் பேசக்கூடியவர்.

அண்மையில் கூட சாதிக் கட்சிகள் குறித்து வெளிப்படையாகப் பேசி இருந்தார். இந்நிலையில், மோடி சுயசரிதைப் படத்தில் அவர் நடிக்க வாய்ப்பில்லை என ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here