தேசிய இளையோர் பிரதான விருதளிப்பில் (2024) பெண்கள் பிரிவில் எஸ்டர் எழில் நங்கை விருது பெற்றார். ஏபிபிஎல் 2024 எனும் இந்த விருதைப் பெறுவேன் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை என்று 21 வயதான அவர் தெரிவித்தார்.
இளைஞர் இயக்கத்தில் நான் இன்னும் தீவிரமாக ஈடுபடுவதற்கு இது உற்சாகத்தை எனக்கு அளிக்கிறது என்றும் அவர் சொன்னார். மலாயா பல்கலைக்கழகத்தின் அனைத்துலக ஆய்வியல் துறையின் முதலாம் ஆண்டு மாணவி இவராவார்.
இளைஞர் இயக்கத்தில் ஈடுபாடு காட்டுவதன் மூலம் சமூக நடவடிக்கைகள் உட்பட பல்வேறு துறைகளில் அனுபவம் பெறுவதற்கான வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது என்றார் அவர்.
இதற்கிடையே ஆண்கள் பிரிவில் பகாங்கைச் சேர்ந்த முகமட் அஸ்மாவி சுலைமான் என்பவர் இந்த விருதைப் பெற்றுள்ளார். இவர்களுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விருதுகளை எடுத்து வழங்கினார்.