ஐபிஎல் கோப்பையை வென்றது கொல்கத்தா அணி!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஐதராபாத்தை எளிதாக வீழ்த்தி கொல்கத்தா அணி 3 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

இந்த இறுதிப்போட்டியில் கொல்கத்தா அணி வென்றதன் மூலம் பல ஐபிஎல் சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளன அல்லது படைக்கப்பட்டுள்ளன.

குறைந்தபட்ச ஸ்கோர்:
நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்களை எடுத்தது. இதன் மூலம் ஐபிஎல் இறுதிப்போட்டியில் குறைந்தபட்ச ரன்களை எடுத்த அணி என்ற மோசமான சாதனையை படைத்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

இதற்கு முன்னர் கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில், மும்பை அணிக்கு எதிராக சென்னை அணி 125 ரன்கள் எடுத்ததே குறைந்தபட்ச ஸ்கோராக இருந்தது.

தனிநபரின் ஸ்கோர்:
கடந்த 17ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில், முதலில் பேட்டிங் செய்த அணியில் உள்ள பேட்ஸ்மேன் 30 ரன்களுக்கு மேல் எடுக்காதது இதுவே முதல் முறை. ஹைதராபாத் அணியில் அதிகபட்சமாக கேப்டன் பேட் கம்மின்ஸ் தான் 24 ரன்களை எடுத்தார்.

3 முறையும் வெற்றி:
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இதுவரை 3 முறை இந்திய மண்ணில் நடைபெற்ற ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்னேறி, 3 இறுதிப்போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப்போட்டி துபாயில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

6 பவுலர்களுக்கு கிடைத்த விக்கெட்:
நேற்று கொல்கத்தா அணி சார்பாக பந்துவீசிய 6 பவுலர்களும் குறைந்தது ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்கள். ரசல் 3 விக்கெட்டுகளும், ஸ்டார்க் 2 விக்கெட்டுகளும், ஹர்ஷித் ரானா 2 விக்கெட்டுகளும், நரைன், வைபவ் அரோரா, வருண் சக்கரவர்த்தி 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

ஐபிஎல் இறுதிப்போட்டியில் ஒரு அணியின் 6 பவுலர்கள் விக்கெட் எடுப்பது இது இரண்டாவது முறை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here