கோத்தா கினாபாலு:
சண்டாக்கானில் உள்ள குடிநுழைவு டிப்போவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஆவணமற்ற 417 பிலிப்பைன்ஸ் பிரஜைகள் MV Antonia 1 என்ற கப்பலில் இன்று தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
சட்டவிரோத குடியேறிகளை அவர்களின் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பும் திட்டத்தின் கீழ், 349 ஆண்கள், 41 பெண்கள் மற்றும் 27 குழந்தைகள் உள்ளனர் என்று
சபா குடிநுழைவு இயக்குனர், டத்தோ ஷ் சிட்டி சலேஹா ஹபீப் யூசோப் கூறினார்.
“அனைத்து கைதிகளும் குடிநுழைவுச் சட்டம் 1959/63 மற்றும் குடிநுழைவு விதிமுறைகள் 1963 இன் கீழ் பல்வேறு குற்றங்களைச் செய்துள்ளனர், மேலும் அவர்கள் நாடு கடத்தப்படுவது நாட்டின் சட்ட நடைமுறைகளுக்கு இணங்கவே மேற்கொள்ளப்படுகிறது” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறினார்.
கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் ல், மொத்தம் 2,437 ஆவணமற்ற பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள் கடல் மற்றும் விமானம் மூலம் திருப்பி அனுப்பப்பட்டதாக அவர் கூறினார்.









