தீ வால் ஸ்டிரிட் ஜர்னல், பாக்ஸ் நியூஸ் போன்ற அமெரிக்க செய்தி ஊடகங்களின் உரிமையாளராக இருந்தவர் ரூபர்ட் முர்டோக் (வயது 93). முர்டோக் தனது உலகளாவிய ஊடக கட்டுப்பாட்டை கடந்த ஆண்டு நவம்பரில் தனது மகன் லாச்லனிடம் ஒப்படைத்தார். இந்நிலையில், ரூபர்ட் தனது நீண்ட நாள் காதலியான எலெனா ஜுகோவாவை (வயது 67) திருமணம் செய்து கொண்டுள்ளதாக தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். இந்த திருமண நிகழ்வானது கலிபோர்னியாவில் உள்ள தனது பங்களாவில் நடைபெற்றதாகவும் அதில் தெரிவித்திருந்தார்.
எலெனா ஜுகோவா ஒரு ஓய்வுபெற்ற மூலக்கூறு உயிரியலாளர் ஆவார். முர்டோக்கும் அவரது காதலிக்கும் இடையே ஆன வயது வித்தியாசம் 25 வருடங்கள் ஆகும். இது இவருடைய 5ஆவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. ரூபர்ட் முர்டோக்வின் முதல் மனைவி பெடிர்கா புக்கர். ஆஸ்திரேலியாவை சேர்ந்த இவர் விமான பணிப்பெண் ஆவார். இவரை 195ஆம் ஆண்டு ரூபர்ட் திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு 6 குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக 1967ம் ஆண்டு முதல் மனைவியை ரூபர்ட் விவாகரத்து செய்தார்.
இதனை தொடர்ந்து 1967ம் ஆண்டு அனா டெவோ என்ற செய்தி வாசிப்பாளரை ரூபர்ட் 2வது திருமணம் செய்துகொண்டார். இவருடன் ரூபர்ட் 32 ஆண்டுகள் வாழ்ந்தார். பின்னர், கருத்துவேறுபாடு காரணமாக 2ஆவது மனைவி அனாவை ரூபர்ட் கடந்த 1999ம் ஆண்டு விவாகரத்து செய்தார். இதையடுத்து, வெண்டி டங்க் என்பவரை ரூபர்ட் 1999ம் ஆண்டு 3வது திருமணம் செய்தார். அவரையும் கடந்த 2013ஆம் ஆண்டு ரூபர்ட் விவாகரத்து செய்தார். இதனையடுத்து, 2016ஆம் ஆண்டு ஜெர்ரி ஹால் என்பவரை ரூபர்ட் 4ஆவது திருமணம் செய்தார்.
ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக ஜெர்ரியை கடந்த 2022ம் ஆண்டு ரூபர்ட் விவாகரத்து செய்தார். ஒட்டுமொத்தமாக 4 திருமணங்கள் செய்த ஜெர்ரிக்கு மொத்தம் 6 குழந்தைகள் உள்ளனர். தற்போது தனது 93 வயதில் 5ஆவது திருமணம் செய்துள்ள ரூபர்ட் தம்பதியருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.