5 வயது வளர்ப்பு மகளை துன்புறுத்தி கொலை செய்த சந்தேகத்தின் பெயரில் தம்பதிகள் கைது!

ஈப்போ:

வளர்ப்பு பெற்றோரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 5 வயது சிறுமி ஒருவர், நேற்று ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

நேற்று காலை 9.45 மணியளவில் குழந்தை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட பின்னர், சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது என்று ஈப்போ மாவட்ட காவல்துறை தலைவர் அபாங் ஜெய்னல் அபிடின் அமாட் கூறினார்.

“பாதிக்கப்பட்டவர் திருமணமான தம்பதியரின் வளர்ப்பு மகள் என்று நம்பப்படுகிறது, அவரின் இறப்பு தொடர்பில் 27 வயது பெண் மற்றும் 66 வயதான ஆண் ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர்,” என்று அவர் இன்று காலை வெளியிட்டஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் உடல் முழுவதும் ஒரு அழுத்தமான பொருளால் அடிக்கப்பட்டதற்கான அறிகுறிகள் இருப்பதாகவும், அத்துடன் அவரது இனப்பெருக்க உறுப்பு மற்றும் ஆசனவாய் கிழிந்து இருப்பதாகவும் அவர் கூறினார்.

இவ்வழக்கை குற்றவியல் சட்டத்தின் 302 வது பிரிவின் கீழ் உள்நோக்கத்துடன் கொலை செய்யப்பட்டதற்காக போலீசார் வகைப்படுத்தியுள்ளனர் என்றும், இன்று காலை ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இரு சந்தேக நபர்களையும் போலீஸ் தடுப்புக் காவலில் வைக்க உத்தரவு கோரப்படும் என்று அபாங் ஜெய்னல் கூறினார்.

“இந்த வழக்கைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள், விசாரணை அதிகாரி, உதவித் துணைத் தலைவர் (ஏஎஸ்பி) நோராஸ்லினா ரைஸ் அஹ்மத், 013-6282176 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம், அல்லது அருகிலுள்ள ஏதேனும் காவல் நிலையத்தை தொடர்புகொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here