இளம் செவிலியிரிடம் தவறாக நடந்து கொண்ட மருத்துவர் கைது

ஜாசின் மெர்லிமாவில் உள்ள ஒரு தனியார் கிளினிக்கின் 29 வயது மருத்துவர் இளம் செவிலியரிடம் தவறாக நடந்து கொண்டதாக போலீசார் கைது செய்தனர். வியாழன் (ஜூன் 13) அதிகாலை 3.15 மணியளவில் மெர்லிமாவ் போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த போலீஸ் குழுவினர் கைது செய்ததாக Jasin OCPD துணைத் தலைவர் அஹ்மட் ஜமில் ரட்ஸி தெரிவித்தார்.

24 மணி நேர கிளினிக்கின் 19 வயது செவிலியர் அளித்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்ததாக அவர் கூறினார். பாதிக்கப்பட்ட பெண் அதே நாளில் (ஜூன் 13) அதிகாலை 2.25 மணிக்கு புகார் அளித்ததாக டிஎஸ்பி அகமது தெரிவித்தார். சந்தேக நபர் திருமணமானவர் என்று அவர் கூறினார்.

சந்தேக நபர் ஜூன் 15 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். பாதிக்கப்பட்டவரிட தவறாக நடந்து கொள்ள  தனது அதிகாரத்தை பயன்படுத்தியதற்காக குற்றவியல் சட்டத்தின் 354ஆவது பிரிவின் கீழ் வழக்கு விசாரிக்கப்படுகிறது. சம்பவத்தின் போது நோயாளிகள் யாரும் இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here