நடிகர் விஷாலுக்கு எதிரான வழக்கு- ஜூன் 28 முதல் இறுதி விசாரணை

நடிகர் விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. விஷால் வாங்கிய ரூ.21.29 கோடி கடனை லைகா செலுத்திய நிலையில், விஷால் திருப்பி செலுத்தவில்லை என லைகா புரொடெக்சன்ஸ் நிறுவனம் 2021ல் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது, வரும் ஜூன் 28ம் தேதி முதல் இறுதி விசாரணை நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

விசாரணையின்போது, லைகாவிற்கும், விஷாலுக்கும் இடையே உள்ள பிரச்சினைக்கு தீர்வு காண சமரச அதிகாரியை நியமிக்க வேண்டும் என விஷால் தரப்பில் கூறப்பட்டது. ஆனால், சமரசத்திற்கு தயார் என விஷால் தரப்பு கூறினாலும், ஆக்கப்பூர்வமாக எதையும் முன்னெடுக்கவில்லை என லைகா தரப்பில் கூறப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here