மனைவியை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் கணவருக்கு தடுப்புக்காவல்

ஈப்போ: கம்போங் சிமியில் உள்ள ஒரு வீட்டில் தனது மனைவியைக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் 56 வயது நபர் ஏழு நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரின் தடுப்புக்காவல்  உத்தரவை மாஜிஸ்திரேட் ஃபரா நபிஹா முஹம்மது டான் வியாழக்கிழமை (ஜூன் 13) இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழங்கினார்.

வியாழன் முதல் எதிர்வரும் புதன்கிழமை (ஜூன் 19) வரை விளக்கமறியலில் வைக்கப்படவுள்ளார். புதன்கிழமை (ஜூன் 12) இங்குள்ள கம்போங் சிமி, லாலுவான் சிமி 11 இல் உள்ள அவரது வீட்டில் 48 வயதுப் பெண் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஈப்போ OCPD உதவி ஆணையர் Abang Zainal Abidin Abang Ahmad, பாதிக்கப்பட்ட பெண்ணின் மார்பில் மூன்று கத்தி குத்து காயங்கள் மற்றும் தலையில் காயம் காணப்பட்டதாக கூறினார். கொலைக்கான தண்டனைச் சட்டம் பிரிவு 302இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here