போட்டியை மட்டுமல்லாமல் மனதையும் வென்ற லெஜெண்ட்..!

கால்பந்து உலகின் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் தான் கிறிஸ்டியானோ ரொனால்டோ. 39 வயதாகும் இவர் கால்பந்து உலகில் படைத்திராத சாதனைகளே இல்லை எனலாம். அதிக கோல்களை அடித்த வீரர் முதல் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் வரை பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார் கிறிஸ்டியானோ ரொனால்டோ.

சமீபத்தில் நடந்து முடிந்த சவூதி ப்ரோ லீகில் ஒரே சீசனில் அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார் ரொனால்டோ. நடைபெற்று முடிந்த சீசனில் மட்டும் ரொனால்டோ 36 கோல்களை அடித்து இந்த சாதனையை செய்தார். ஆனால் இறுதிப்போட்டியில் ரொனால்டோவால் தன் அணியை வெற்றிபெற செய்யமுடியவில்லை.

இது அவருக்கு மிகப்பெரிய வருத்தமாக இருந்தது. இருப்பினும் யூரோ கோப்பைக்காக தயாராகி தற்போது முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார் ரொனால்டோ. ஐயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் போர்த்துகீஸ் அணி 3 – 0 என்ற கணக்கில் வென்றது.

இந்த போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒரு கோல் அடித்து தன் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருப்பினும் களத்தில் ரொனால்டோ செய்த விஷயத்தை காட்டிலும் களத்திற்கு வெளியே ரொனால்டோ செய்த விஷயம் தான் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகின்றது.

ரொனால்டோ ஒரு இளம் சிறுமியை ஆடுகளத்தில் வழிநடத்த முன்முயற்சி எடுத்தார். இந்த செயல் தான் பலரது பாராட்டையும் பெற்று வருகின்றது. பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்ட அந்த இளம் சிறுமியிடம் ரொனால்டோ நடந்துகொண்ட விதம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரொனால்டோ களத்தில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் ஒரு சாம்பியன் தான் என பலரும் அவரை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here