‘மஞ்சுமெல் பாய்ஸ்’ கிளப்பிய எதிர்பார்ப்பு; கமலின் ‘குணா’ படம் மீண்டும் வெளியீடு!

நடிகர் கமல்ஹாசனின் ‘குணா’ திரைப்படம் மீண்டும் வெளியிடப்படவுள்ளது. இந்த செய்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

சந்தான பாரதி இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், ரோஷினி, ஜனகராஜ், ரோஹினி உள்ளிட்டப் பலர் நடிப்பில்,1991-ம் ஆண்டு தீபாவளி அன்று வெளிவந்த படம் ‘குணா’. சமீபத்தில் மலையாளத்தில் வெளியான ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படம் மூலம் ‘குணா’ படம் 2கே கிட்ஸ் தலைமுறையிடமும் டிரெண்ட் ஆனது.

குறிப்பாக, ’டெவில் கிச்சன்’ என அழைக்கப்படும் குணா குகையில் படமாக்கப்பட்ட ‘கண்மணி அன்போடு காதலன்…’ பாடலும் இணையத்தைக் கலக்கியது. படம் குறித்து இயக்குநர் சந்தான பாரதி பகிர்ந்து கொண்டதாவது, “மலையாள திரைப்படங்களில் 200 கோடி ரூபாய் மொத்த வசூலை கடந்த முதல் மலையாள திரைப்படம் என்கிற சாதனையை நிகழ்த்த அடிப்படை காரணிகளில் ஒன்றாக இருந்தது ‘குணா’.

இதற்குக் காரணம் திரைப்படத்தில் இடம்பெற்ற வசனம், பாடல்களை ’மஞ்சுமெல் பாய்ஸ்’ படத்தில் பயன்படுத்தியதே. ’குணா’ திரைப்படம் வெளியானபோது கூட திரையரங்குகளில் குணா படத்தில் இடம்பெற்ற வசனங்கள், பாடல்களுக்கு இந்தளவு வரவேற்பு கிடைக்கவில்லை. இன்றைய தலைமுறை ’மஞ்சுமெல் பாய்ஸ்’ படத்தில் அதனை திரையரங்குகளில் ஆரவாரத்துடன் கொண்டாடியதை பார்த்து என் உடம்பு புல்லரித்து போனது” என்றார்.

கமல்ஹாசன் திரையுலக வாழ்க்கையிலும், தமிழ் சினிமா வரலாற்றில் தவிர்க்க முடியாத திரைப்படமாக இருந்து வரும் ’குணா’ திரைப்படம் டிஜிட்டல் வடிவத்தில், மெருகூட்டப்பட்டு இந்த மாதம் 21ம் தேதி உலகம் முழுவதும் ரீ-ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது என்பதை படக்குழு மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here