‘தற்காலிக ஓய்வு’.. இந்திய ஸ்டார் ஆல்-ரவுண்டர் அறிவிப்பு:

அறுவை சிகிச்சை, அதனைத் தொடர்ந்து ஓய்வு போன்ற காரணங்களுக்காக, இந்திய அணியில் இருந்து விலகி, தற்காலிக ஓய்வுக்கு செல்வதாக ஸ்டார் ஆல்-ரவுண்டர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎலில், ஷர்தூல் தாகூர்:

ஐபிஎல் 17ஆவது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய ஷர்தூல் தாகூர், 9.75 எகனாமியில் ரன்களை விட்டுக்கொடுத்து, 5 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.

அறுவை சிகிச்சை:

இந்நிலையில், தனது கால் பாதத்தில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை எடுப்பதற்காக, ஷர்தூல் தாகூர் லண்டன் சென்ற நிலையில், அவருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

2019-லும்:

2019ஆம் ஆண்டிலும், ஷர்தூல் தாகூருக்கு இதேபோல் பாதத்தில் காயம் ஏற்படத்தை தொடர்ந்து, அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. தற்போது, அதேபோல் ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

தற்காலிக ஓய்வு:

இந்நிலையில், தனக்கு தற்காலிகமாக ஓய்வு வேண்டும் என ஷர்தூல் தாகூர் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. காயம் முழுமையாக குணமடைய 3 மாதங்கள் ஆகும் எனக் கணிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 6 மாதங்கள் வரை தனக்கு ஓய்வு வேண்டும் என ஷர்தூல் கேட்டுக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here