கிரிக்கெட் வரலாற்றிலேயே மிகக் குறைந்த பந்துகளில் அடிக்கப்பட்ட அதிவேக சதம் என்ற சாதனையை படைத்திருக்கிறார் எஸ்டோனியா நாட்டைச் சேர்ந்த சாஹில் சவுகான். இவர் இந்திய வம்சாவளி வீரர் ஆவார்.
எஸ்டோனியா மற்றும் சைப்ரஸ் நாடுகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியில் இந்த பிரம்மாண்ட சாதனையை நிகழ்த்தி இருக்கிறார் சாஹில் சவுஹான். வெறும் 27 பந்துகளில் சதம் அடித்த அவர் மொத்தம் 18 சிக்ஸர்களை அடித்து சைப்ரஸ் அணியை மிரள வைத்தார். 41 பந்துகளில் 144 ரன்கள் குவித்தார் சாஹில்.
இந்தப் போட்டியில் சைப்ரஸ் முதலில் பேட்டிங் செய்து 191 ரன்கள் எடுத்த நிலையில், அதில் முக்கால்வாசி ரன்களை சாஹில் சவுஹான் மட்டுமே எடுத்து தனது அணியை வெற்றி பெற வைத்தார். வெறும் 13 ஓவர்களில் 192 ரன்கள் இலக்கை சேஸிங் செய்து முடித்தது எஸ்டோனியா. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சைப்ரஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்து இருந்தது.
தொடர்ந்து சிக்ஸர்களை பறக்க விட்ட சாஹில் சவுஹான் 27 பந்துகளில் தனது சதத்தை நிறைவு செய்தார். தொடர்ந்து அதிரடி ஆட்டம் ஆடிய அவர் 41 பந்துகளில் 144 ரன்கள் எடுத்தார். 13 ஓவர்களில் எல்லாம் வெற்றி இலக்கான 192 ரன்களை எட்டியது எஸ்டோனியா. கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த சாஹில்-இன் ஸ்ட்ரைக் ரேட் 351 ஆக இருந்தது. அவர் 6 ஃபோர் மற்றும் 18 சிக்ஸர்களை அடித்து இருந்தார்.
அந்த அணியின் தரன்ஜித் சிங் 17 பந்துகளில் 44 ரன்கள் எடுத்திருந்தார். அடுத்து எஸ்டோனியா அணி பேட்டிங் செய்தபோது 9 ரன்களுக்கு இரண்டு விக்கெட்களை இழந்து தவித்தது. பின்னர் சாகில் சவுகான் அதிரடி ஆட்டத்தை துவக்கினார். இடையே 2 விக்கெட்கள் வீழ்ந்தன. ஆறாம் வரிசையில் இறங்கிய பிலால் மசூத் அவருக்கு ஒத்துழைப்பு அளித்து ஆடினார்.
27 பந்துகளில் தனது சதத்தை நிறைவு செய்து இருந்த சாஹில் சவுஹான், அதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 33 பந்துகளில் அடிக்கப்பட்ட அதிவேக சதம் என்ற நமீபியா வீரர் லாப்டி ஈட்டனின் சாதனையை முறியடித்தார். மேலும் ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட் வரலாற்றில் 30 பந்துகளில் அடிக்கப்பட்ட அதிவேக சதமான கிறிஸ் கெயிலின் சாதனையையும் முறியடித்தார்.