வாழ்வின் மறக்க முடியாத மாலை; ஐஸ்வர்யா அர்ஜூன் மகிழ்ச்சி!

எங்கள் வாழ்வின் மறக்க முடியாத மாலை என நடிகை ஐஸ்வர்யா அர்ஜூன் கணவர் உமாபதியுடனான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

நடிகை ஐஸ்வர்யா அர்ஜூன் – உமாபதி தம்பதி தங்கள் வாழ்வின் மறக்க முடியாத மாலை என்ற கேப்ஷனுடன் ரிசப்ஷன் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளனர். கடந்த ஜூன் 10ம் தேதி இந்த ஜோடிக்கு சென்னையில் அர்ஜூனுக்கு சொந்தமான ஆஞ்சநேயர் கோயிலில் திருமணம் நடந்தது. அதைத் தொடர்ந்து தனியார் ஹோட்டல் ஒன்றில் நடந்த ரிசப்ஷனில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என ரிசப்ஷனின் மகிழ்ச்சியானத் தருணங்களின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளது இந்த ஜோடி.

நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட திரையுலகைச் சேர்ந்த முக்கிய பிரபலங்களும், முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் திருமண வரவேற்பில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

ஐஸ்வர்யா அர்ஜூன் - உமாபதி

கடந்த சில நாட்களுக்கு முன்பு,பத்திரிக்கையாளர்களை சந்தித்தபோது, தம்பி ராமையா குடும்பத்திற்கு தனது மகள் மருமகளாகப் போவதில் பெருமை என நடிகர் அர்ஜூன் கூறியிருந்தார். நடிகர் தம்பி ராமையாவும் ஐஸ்வர்யா தனக்கு இன்னொரு மகள் என நெகிழ்ச்சியாகக் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here