ஹஜ்ஜுப்பெருநாள்: யாத்திரைக்கு சென்ற 15 மலேசியர்கள் மரணம்

கடந்த திங்கட்கிழமை முஸ்லிம் அன்பர்களால் கொண்டாடப்பட்ட ஹஜ்ஜுப் பெருநாளின் முக்கிய நிகழ்வாக தங்கள் ஹஜ்ஜு கடமையை முடிக்க மக்காவுக்கு யாத்திரை சென்ற நூற்றுக்கணக்கான யாத்திரீகர்கள் வெப்பம் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

இவ்வாண்டு சுமார் 550 புனித யாத்ரீகர்கள் மரணமடைந்துள்ளதாக
சவூதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

மரணமடைந்தவர்களில் 323 யாத்ரீகர்கள் எகிப்தியர்கள் ஆவர். அவர்களில் பெரும்பாலோர் வெப்பம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
மேலும் 144 இந்தோனேசிய பயணிகள் மரணமடைந்தாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் மலேசிய யாத்திரீகர்கள் 15 பேர் உயிரிழந்துள்ளதாக முதல்கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து ஏனையோர் துனிசியா (35), ஈரான் (11) ஜோர்டான் (6), செனகல் (3) ஆகிய நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் அது தெரிவித்துள்ளது.

மக்காவில் உள்ள ஹரம் பள்ளிவாசலில் வெப்பநிலை 51.8 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்ததாக சவுதி அரேபியாவின் அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.ல் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here