‘கல்கி 2898 ஏடி’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சி பல புராணங்களின் கலவையாக இருக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
படத்தின் கதை மகாபாரத்தில் இருந்தே தொடங்குவதாக இயக்குநர் நாக் அஸ்வின் முன்பு சொல்லி இருந்தார். “மகாபாரதக் காலக்கட்டத்தில் தொடங்கும் இந்தக் கதை அதன் பிறகு 6000 ஆண்டுகள் நடக்கும் விஷயங்களைப் பேசுகிறது. அந்த உலகம் எப்படி இருக்கும் என்பதை கற்பனையாக உருவாக்க முயன்றுள்ளோம். இதை முடிந்த வரை இந்திய பின்னணியிலேயே உருவாக்கியுள்ளோம்” என்றார்.
படத்தின் கிளைமாக்ஸ் பல இந்திய புராணக்கதைகளின் கலவையாக இருக்கும். இது பிரமாண்டமாகவும் வசீகரிக்கும் வகையில் இருக்கும் எனப் படக்குழு கூறியுள்ளது. கடந்த கால இதிகாசங்களின் தொடர்ச்சியாக, முந்தைய யுகங்களின் போராட்டங்கள் மற்றும் போர்களின் உச்சக்கட்டத்தை வெளிப்படுத்தும் இறுதிப் போரைக் காட்சிப்படுத்தியுள்ளார் நாக் அஸ்வின். இந்த காவிய மோதல் ஒரு சகாப்தத்தின் முடிவையும் புதிய ஒன்றின் தொடக்கத்தையும் குறிக்கிறது.