சுங்கை சிப்புட் ஸ்ரீ சுப்ரமணியர் ஆலய கும்பாபிஷேகம் மடானி அரசாங்கம் தொடர்ந்து ஆதரவு

சுங்கை சிப்புட்:

பேராக், சுங்கை சிப்புட்டில் அமைந்திருக்கும் ஸ்ரீ சுப்ரமணியர் ஆலய தேவஸ்தான பரிபாலன சபா இம்மாதம் 16ஆம் தேதி 5ஆவது மகா கும்பாபிஷேக விஞ்ஞாபனத்தையும் 100ஆம் ஆண்டு சம்பூர்த்தி
விழாவையும் நடத்தியது.

பிரமுகர்கள் பலரும் திரளான மக்களும் இந்த விழாவில் கலந்து சிறப்பித்தனர். 1923ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தத் திருக்கோவில் அண்மையில் மடானி அரசாங்கத்தின் உதவியும், நன்கொடைகளையும் பெற்று புனரமைக்கப்பட்டது.

இந்தப் புனரமைவுக்கு வீடமைப்பு, ஊராட்சி அமைச்சு 2023ஆம் ஆண்டில் 237,300ரிங்கிட்டும் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் கேசவன் 25,000 ரிங்கிட்டும் சுங்கை சிப்புட் ஸ்ரீ சுப்ரமணியர் ஆலய கும்பாபிஷேகம் மடானி அரசாங்கம் தொடர்ந்து ஆதரவு வழங்கியிருந்தனர்.

இந்த ஆண்டில் பிரதமர்அலுவலகம், கோவில்திருப்பணிகளுக்காக மேலும் 50,000 ரிங்கிட்டும் வழங்கியிருந்தது. இதோடு பேராக் மாநிலமும் ஒரு தொகையை வழங்க பரிசீலனை செய்து வருகிறது. எந்த சமயத்தினரின் நம்பிக்கைகளும் புறந்தள்ளப்பட்டு விடக்கூடாது எனும் அரசாங்கத்தின் நிலை இதில் நன்கு பிரதிபலிப்பதாக பிரதமரின் சிறப்புப் பணிகளுக்கான அதிகாரி சண்முகம் மூக்கன் தெரிவித்தார்.

நீண்ட நெடிய பாரம்பரியத்தைக் கொண்ட இந்த ஆலயம் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டு வந்துள்ளது.

இந்த மகா கும்பாபிஷேக விழாவையொட்டி 48 நாட்கள் மண்டலாபிஷேகப் பூஜைகளும் சிறப்பாக ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளன, கூடவே 48 நாட்களுக்கும் வருகைதரும் பக்த களுக்கென உபயமும் 17.6.2024 முதல் 3.8.2024 வரையிலும் மிகச்சிறப்பாக ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது என்பதையும் ஆலய நிர்வாகத்தினர் மக்களுக்குத் தெரிவித்துக் கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here