நண்பரின் 5 வயது மகளை கொலை செய்ததாக வான் பாத்திமா மீது குற்றச்சாட்டு

ஈப்போ: இல்லத்தரசி ஒருவர் தனது நண்பரின் ஐந்து வயது மகளைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வான் பாத்திமா சஹ்ரா வான் அப்துல்லா 27, வெள்ளிக்கிழமை (ஜூன் 21) மாஜிஸ்திரேட் எஸ். புனிதா முன் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட பிறகு புரிந்துகொண்டு தலையசைத்தார். கொலை வழக்கு உயர் நீதிமன்றத்தின் கீழ் உள்ளதால் எந்த மனுவும் பதிவு செய்யப்படவில்லை. ஜூன் 5 முதல் 10 வரை  ஜாலான் கிளெடாங் ராயா 23,தாமான் மால்காப்பில் உள்ள ஒரு வீட்டில் இமான் அடெலியா யூசுல்லாவைக் கொன்றதாக அவர் குற்றம் சாட்டப்பட்டார்.

குற்றவியல் சட்டத்தின் 302ஆவது பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது, இது மரண தண்டனை அல்லது 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் 12 பிரம்பால் அடித்தல் ஆகியவற்றை வழங்குகிறது. அரசு தரப்பில் DPP வாட்சிரா வோங் ருய் ஃபெர்ன் ஆஜரான வேளையில் குற்றம் சாட்டப்பட்டவர் சார்பில் யாரும் ஆஜராகவில்லை. ஜாமீன் எதுவும் வழங்க வேண்டாம் என்று வோங் நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டார். வேதியியலாளரின் அறிக்கைக்காக காத்திருப்பதால் புனிதா ஆகஸ்ட் 28 ஆம் தேதிக்கு வழக்கினை ஒத்தி வைத்தார்.

பகாங்கைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்கள், குழந்தையின் தாய் உட்பட, நடவடிக்கையின் போது அங்கு வந்து அழுதனர். நீதிமன்றத்தை விட்டு வெளியேறும் முன், குழந்தையின் தாய் குற்றம் சாட்டப்பட்டவரிடம், “ஏன் என் மகளுக்கு இப்படி செய்தாய்?”

ஜூன் 11 அன்று ஒரு குழந்தை துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. அதன் விளைவாக சிறுமி மரணம் அடைந்தார். குற்றம் சாட்டப்பட்டவரும் அவரது 66 வயது கணவரும் சில மாதங்களாக சிறுமியை கவனித்து வந்ததாக ஈப்போ OCPD உதவி ஆணையர் Abang Zainal Abidin Abang Ahmad தெரிவித்தார். உயிரிழந்த சிறுமியின் உடல் முழுவதும் மழுங்கிய பொருளால் அடித்தற்கான அறிகுறிகள் இருப்பதாகவும், அந்தரங்க உறுப்புகள் மற்றும் ஆசனவாயில் காயம் இருப்பதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here