“சீனா அலட்சியம்..” விழுந்து நொறுங்கிய ராக்கெட்.. அலறி ஓடிய பொதுமக்கள்.. என்ன நடந்தது

பெய்ஜிங்: சீனா கடந்த சில காலமாகவே விண்வெளி துறையில் கவனம் செலுத்தி வருவது அனைவருக்கும் தெரியும்.. இதற்கிடையே சீனா அனுப்பிய ராக்கெட்டின் ஒரு பகுதி திடீரென மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிக்கு மிக அருகே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ராக்கெட்டை பார்த்து மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடும் வீடியோ பகீர் கிளப்புவதாக இருக்கிறது. உலகின் டாப் நாடுகள் அனைத்தும் இப்போது விண்வெளி துறையில் ஆர்வம் காட்டி வருகிறது. அதன்படி சீனாவும் விண்வெளியில் முக்கிய திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறது.இதற்கிடையே அப்பிய சீனா அனுப்பிய ராக்கெட் ஒன்று மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் மீண்டும் விழுந்து நொறுங்கிய சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராக்கெட்: கடந்த சனிக்கிழமை சீனா மற்றும் பிரான்ஸ் இணைந்து லாங் மார்ச் 2-சி ராக்கெட்டை ஏவியது.. இருப்பினும், அந்த ராக்கெட் ஏவப்பட்ட கொஞ்ச நேரத்திலேயே அதன் ஒரு பகுதி மீண்டும் பூமியில் விழுந்து வெடித்துச் சிதறி மிகப் பெரிய விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் அலறியடித்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறினர். SVOM எனப்படும் ஸ்பேஸ் வேரியபிள் ஆப்ஜெக்ட்ஸ் மானிட்டர் என்ற விண்கலத்துடன் இந்த ராக்கெட் நேற்று ஜூன் 22ஆம் தேதி அதிகாலை 3.00 மணிக்கு ஜிசாங் ஏவுதளத்தில் இருந்து புறப்பட்டது. இருப்பினும், புறப்பட்ட சிறிது நேரத்திலே ராக்கெட்டில் ஏதோ பிரச்சினை ஏற்பட்டுள்ளது. பூஸ்டர் என்று கூறப்படும் ராக்கெட்டின் ஒரு பகுதி மீண்டும் பூமியில் விழுந்து நொறுங்கியது.

பகீர் சம்பவம்: பார்த்தாலே பதற வைக்கும் இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. ராக்கெட் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிக்கு மிக அருகில் விழுந்துள்ளது. அதிக சத்தத்துடன் ராக்கெட் வானத்தில் இருந்து தங்களை நோக்கி வருவதைப் பார்த்த மக்கள் அப்பகுதியில் இருந்து அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது இந்த லாங் மார்ச் 2C ராக்கெட்டில் நைட்ரஜன் டெட்ராக்சைடு மற்றும் சமச்சீரற்ற டைமெதில்ஹைட்ராசின் ஆகியவற்றின் கலவை தான் எரிபொருளாகப் பயன்படுத்துகிறது.. அவை மனிதர்களுக்கு நச்சுத்தன்மையுடையவை.

இதை மனிதர்கள் உள்ளே இழுத்தால் பல விதமான பாதிப்புகள் ஏற்படும். மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதியில் ராக்கெட் விழுந்துள்ள நிலையில், இதைச் சுவாசிக்கும் மக்களுக்கும் உடல்நிலை பாதிப்பு ஏற்படும் என்று வல்லுநர்கள் பலரும் கவலை தெரிவித்துள்ளனர்.பொதுவாக ராக்கெட்டின் பூஸ்டர் உள்ளிட்ட பகுதிகள் இதுபோல பூமியில் விழுவது வழக்கமான ஒன்று தான். ஆனால், அவை கடலில் விழுவது போலத் தான் பிளான் செய்து இருப்பார்கள்.. ஆனால், சீனா அதை மக்கள் நெருக்கம் அதிகம் இருக்கும் பகுதியில் விழுவது போலத் திட்டமிட்டிருந்ததே பதற்றத்தை அதிகரித்து இருக்கிறது.

கவலைப்படாத சீனா: அதேநேரம் சீனா இதைப் பற்றி எல்லாம் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அவர்கள் இந்த மிஷன் வெற்றிகரமாக முடிந்துவிட்டதாக அறிவித்துவிட்டனர். தொலைதூர நட்சத்திரங்கள் குறித்து ஆய்வு செய்ய மிகவும் சக்தி வாய்ந்த இந்த சாட்டிலைட் சரியான வெற்றிகரமாகச் சுற்றுப்பாதையை அடைந்துவிட்டதாகச் சீனா அறிவித்துள்ளது. காமா-கதிர் வெடிப்புகள் போலத் தொலை தூரங்களில் நடக்கும் ஸ்பேஸ் நிகழ்வுகளை ஆய்வு செய்வதே இதன் பணியாகும். இதுபோன்ற நிகழ்வுகள் ஏன் ஏற்படுகிறது.. இதன் பின்னணி என்ன என்பது ஆய்வு செய்யவே இந்த சாட்டிலைட் பயன்படும். இது சீனா மற்றும் பிரான்ஸ் இணைந்து உருவாக்கிய முதல் சாட்டிலைட் ஆகும்.

சீனா: சீனா கடந்த சில காலமாகவே விண்வெளி துறைக்கு அதீத முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இம்மாத தொடக்கத்தில் கூட சீனா தனது Chang’e-6 சாட்டிலைட் மூலம் சந்திரனின் தொலைதூரப் பகுதியில் இருந்து மாதிரிகளைச் சேகரித்தது. அதன் மாதிரிகள் விரைவில் ஆளில்லா விண்கலம் மூலம் பூமிக்கு எடுத்து வர இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here