லஹாட் டத்துவில் மரம் விழுந்து போலீஸ்காரர் பலி!

கோத்தா கினாபாலு:

போலீஸ் வேன் மீது மரம் விழுந்ததில் போலீஸ்காரர் ஒருவர் உயிரிழந்தார்.

வெள்ளிக்கிழமை மதியம் 2.30 மணியளவில் , சபாவின் கிழக்கு கடற்கரையான லாஹாட் டத்து மாவட்டத்தில் ஃபெல்டா சஹாபாட் 16 க்கு அருகில் சாலையின் வலதுபுறத்தில் இருந்த மரம் வேன் மீது விழுந்ததில் இந்த சோகம் நிகழ்ந்தது.

May be an image of car and tree

இந்த விபத்தில் லாஹாட் டத்து வின் 17வது GOF பட்டாலியனில் இருந்த கார்ப்ரல் ஜீனோ குங்கோஹ் என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்தது உறுதி செய்யப்பட்டது.

உயிரிழந்தவர் முன்பு சிறப்பு அதிரடிப் பிரிவின் உறுப்பினராகப் பணியாற்றியவர் என்பதும், 2013ல் லஹாட் டத்துவில் நடந்த வெளிநாட்டு ஊடுருவலுக்கு எதிரான நடவடிக்கையிலும் அவர் ஈடுபட்டிருப்பதாகவும் அறியப்படுகிறது என்று, லஹாட் டத்து காவல்துறைத் தலைவர் அசிஸ்ட் கமிம் துல்பஹாரின் இஸ்மாயில் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here