கூச்சிங்:
மக்களவையின் புதிய தலைவர் சரவாக்கில் இருந்து வருவார் என்று மாநில முதல்வர் டான்ஸ்ரீ அபாங் ஜோஹாரி ஓபன் கூறினார்.
இருப்பினும், அது தொடர்பில் அவர் பெயர் உட்பட எந்த விவரங்களையும் அவர் வெளியிட மறுத்துவிட்டார், ஆனால் விரைவி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதை அறிவிப்பார் என்று அவர் சொன்னார்.
மேலும் “பிரதமரின் அறிவிப்புக்காக அனைவரும் காத்திருக்கிறோம், நானும் காத்திருக்கிறேன். ஆனால்நிச்சயமாக (புதிய மக்களவை தலைவர் ) ஒரு சரவாக்கியராக இருப்பார்,” என்று அவர் இன்று (ஜூன் 24) இபான் கலாச்சார கருத்தரங்கைத் தொடங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.
கடந்த சனிக்கிழமை (ஜூன் 22) மாநில கவாய் விருந்துக்கு பிரதமர் வந்திருந்தபோது, புதிய மக்களவை தலைவரை நியமிப்பது குறித்து அன்வாருடன் விவாதித்தீர்களா என்று அபாங் ஜோஹாரியிடம் கேட்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
























