மித்ராவின் பாலர்பள்ளி கல்வி, டயாலிசிஸ் மானியங்களுக்கான விண்ணப்பங்கள் இன்று திறக்கப்படுகின்றன

கோலாலம்பூர்:

மலேசிய இந்திய மாற்றுப் பிரிவின் (மித்ரா) கீழ் 2024/2025 தனியார் பாலர் பள்ளிகளுக்கான ஆரம்பக் கல்வி மானியம் மற்றும் டயாலிசிஸ் மானியத் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் இப்போது முதல் ஜூலை 23, 2024 வரை திறந்திருக்கும்.

தனியார் மழலையர் பள்ளிகளுக்கான ஆரம்பக் கல்வி மானியம், அதாவது நான்கு முதல் ஆறு வயது வரையிலான மலேசிய இந்தியக் குழந்தைகள் தமது ஆரம்பக் கல்வியைப் பெறுவதை உறுதி செய்வதோடு, தனியார் மழலையர் பள்ளி நடத்துபவர்களுக்கு அவற்றை இயக்க உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று, மித்ரா சிறப்புப் பணிக் குழுத் தலைவர் பி. பிரபாகரன் கூறினார்.

மேலும் RM10.8 மில்லியன் ஒதுக்கீட்டில், 4,500 இந்திய மழலையர் பள்ளிகளுக்கு இந்த மானியம் உதவியாக இருக்கும் என்றும், ஒவ்வொருவரும் RM150 வரை மாதாந்திர கட்டண மானியத்தையும், மார்ச் 2024 முதல் பிப்ரவரி 2025 வரையிலான அடுத்த 12 மாதங்களுக்கு RM50 உணவு மானியத்தையும் பெறுவார்கள் என்று அவர் சொன்னார்.

எனவே “தகுதியுள்ள பாலர் பள்ளி நடத்துநர்கள் மித்ரா கிராண்ட் இணையதளத்தில் https://shorturl.at/WW9sq என்ற இணைப்பைப் பயன்படுத்தி கூகுள் படிவத்தைப் பூர்த்தி செய்து மானியத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

முழுமையற்ற படிவங்கள் அல்லது தேவைகளைப் பூர்த்தி செய்யாத விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது,” என்று, இன்று திங்கட்கிழமை (ஜூன் 24) நாடாளுமன்ற கட்டிடத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறினார்.

அதேநேரம், மித்ரா டயாலிசிஸ் மானியம், இறுதி நிலை சிறுநீரக நோயால் (ESRD) பாதிக்கப்பட்ட இந்திய நோயாளிகளுக்கு, குறிப்பாக டயாலிசிஸ் சிகிச்சையைப் பெற முடியாத நோயாளிகளுக்கு சிகிச்சை வசதிகளை வழங்கும் என்று பிரபாகரன் கூறினார்.

“500 நோயாளிகளுக்கு உதவ RM7.59 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது, அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு வருடத்திற்கு டயாலிசிஸ் சிகிச்சை, ஊசி (RM2,800), இரத்த பரிசோதனைகள் (RM600) மற்றும் போக்குவரத்து செலவு (RM1,500) ஆகியவற்றிற்காக RM10,000 பெறுவார்கள் என்றார்.

மருத்துவ அலுவலர் மற்றும் டயாலிசிஸ் மையத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டிய அனைத்து விண்ணப்பங்களையும், https://shorturl.at/K7GGL என்ற இணையதளத்தில் கூகுள் படிவத்தின் மூலம் சமர்ப்பிக்கலாம், என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here