(Mourhrna Reddy @ London)
மலேசியாவின் மிகச் சிறந்த குறைந்த கட்டண விமான நிறுவனமாகப் புகழ்பெற்ற AirAsiaவுக்கு லண்டனில் நடைபெறும் Skytrax World Airline Awards 2024 விருதளிப்பு நிகழ்ச்சியில் 15ஆவது தடவையாக வரலாற்றுப்பூர்வ சாதனை விருது வழங்கப்பட்டது.

இந்த உலகளாவிய சாதனைக்கு AirAsiaவின் நிறுவனரும் Capital A தலைமைச் செயல் அதிகாரி டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸின் வியூகங்களும் ஆக்கப்பூர்வத் திட்டங்களும் அடிப்படைக் காரணிகளாகத் திகழ்கின்றன.

மிகவும் நலிந்து நொடித்துப் போயிருந்த இந்த நிறுவனத்தை 2001ஆம் ஆண்டில் டோனியும் கமாருடின் மெரானுனும் கொள்முதல் செய்து 2 விமானங்களுடன் சேவையில் ஈடுபட்டனர். 200 பணியாளர்களுடன் சேவையைத் தொடங்கிய AirAsiaஆசியாவின் 4ஆவது மிகப் பெரிய நிறுவனமாக விளங்கியது.

தற்போது Malaysia, Thailand, Indonesia, the Philippines, Cambodia மேலும் சில நாடுகளில் அலுவலகங்களை அமைத்து 21 ஆயிரம் பணியாளர்களுடன் 200 விமானங்களை இந்நிறுவனம் கொண்டிருக்கிறது.

AirAsia குழுமம் அதன் 5ஆவது விமான நிறுவனமாக ஏர்ஆசியா கம்போடியாவை தோற்றுவித்து சேவையில் ஈடுபட்டிருப்பது அதன் வளர்ச்சிக்கான மிகப் பெரிய சான்றாக உள்ளது.

அனைவரும் விமானத்தில் பறக்கலாம் என்ற கனவை நனவாக்கியவர் அவர். இந்த நிறுவனம் கிட்டத்தட்ட 80 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கிறது. பல சவால்களைக் கடந்து இன்று வெற்றிப் பாதையில் ஏர் ஆசியா பயணித்துக் கொண்டிருக்கிறது.
AirAsia வின் வளர்ச்சி என்பது கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. இந்தப் பெருமைக்கெல்லாம் அடிப்படை கரணியாகத் திகழ்பவர் டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ்.
