இந்தாண்டின் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை படைத்த Inside Out 2

பிரபல அனிமேஷன் படமான Inside Out 2, வெளியான 2 வாரங்களில் 100 மில்லியன் டாலர் வசூலை குவித்து சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பாக THE SUPER MARIO BROS, 92 மில்லியன் டாலர் வசூலை குவித்து, வெளியான 2வது வாரத்தில் அதிக வசூலை பெற்ற அனிமேஷன் படம் என்ற பெருமையை பெற்றிருந்தது.

உலகம் முழுவதும் Inside Out 2 திரைப்படம் 724 மில்லியன் டாலரை வசூலித்து இந்தாண்டில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது. இன்னும் ஒரு வாரத்திற்குள் இத்திரைப்படம் 1 பில்லியன் டாலர் வசூலை கடந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடைசியாக பார்பி திரைப்படம் தான் 1 பில்லியன் டாலரை வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. 2015 ஆம் ஆண்டு வெளியான Inside Out படத்தின் முதல் பாகம் உலகம் முழுவதும் 859 மில்லியன் டாலர் வசூலை குவித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here