கோலாலம்பூர்:
சமீபத்தில் சமூக ஊடகங்களில் ஒரு மாணவியை கொடுமைப்படுத்தும் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, அதனுடன் தொடர்புடைய மாணவர்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறான கொடுமைப்படுத்தல் அல்லது பகடிவதையில் ஈடுபடும் எந்த தரப்பினருடனும் கல்வி அமைச்சு சமரசம் செய்யாது.
நேற்று திங்கட்கிழமை முதல் வைரலாகி வரும் அந்த வீடியோவில், மாணவி ஒருவரை சில மாணவிகள் முகத்திலும் தலையிலும் அறைந்ததை காட்டியது.
இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 9 பேரை போலீசார் கைது செய்துள்ளதாகவும், குற்றவியல் சட்டம் பிரிவு 323/506 மற்றும் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டம் 1998 இன் பிரிவு 233 கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் பெட்டாலிங் மாவட்ட காவல்துறை தலைவர் துணை ஆணையர் ஜம்ரி அலி கூறினார்.