இந்தோனேசியாவில் விற்பனை விதிமுறைகளை மீறியதாக shopee மீது குற்றச்சாட்டு

ஜகார்த்தா:

இந்தோனேசியாவின் இணைய வர்த்தகத் தளமான ‘Shopee’ அதன் விநியோகச் சேவைக்கான விற்பனை விதியை மீறியதை ஒப்புக்கொண்டதாக அந்நாட்டின் வர்த்தக போட்டித்தன்மை ஆணையம் புதன்கிழமை (ஜூன் 26) வெளியிட்ட ஓட் அறிக்கையில் தெரிவித்ததாக ‘ராய்ட்டர்ஸ்’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட சில விநியோகச் சேவைகளைப் பயன்படுத்தும்படி வாடிக்கையாளர்களைக் கேட்டுகொண்டதன் மூலம், அந்நாட்டின் வர்த்தகப் போட்டிகளைத் தடுக்கும் விதியை ‘Shopee’ நிறுவனம் மீறியதாக அந்நாட்டு ஆணையம் கடந்த மாதம் குற்றம் சாட்டியது.

“இந்தோனேசியாவில் தங்களுக்குப் பொருந்தக்கூடிய அனைத்து விதிமுறைகளுக்கும் சட்டங்களுக்கும் இணங்கி எங்கள் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள ‘shopee’ நிறுவனம் எப்போதும் உறுதிபூண்டுள்ளது,” என ஷாப்பி இந்தோனேசியாவின் பொது விவகாரத்துறை தலைவர் ராடினல் நடப்ரவிரா தெரிவித்தார்.

தனது வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த சேவைகளை வழங்க, ஆணையத்தின் கருத்துகளுக்கு ஏற்ப அதன் பயனர் செயல்பாட்டு முறையில் மாற்றங்களை ஷாப்பி முன்மொழிந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here