ஜாஹிட் ஹமிடியின் DNAA வழக்கு; மலேசிய வழக்கறிஞர் மையத்தின் விண்ணப்பம் நிராகரிப்பு

கோலாலம்பூர்:

துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ அமாட் ஜாஹிட் ஹமிடியை உட்படுத்திய 47 லஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து நிபந்தனையற்ற விடுதலை வழங்கப்பட்டது மற்றும் குறித்த வழக்கின் விசாரணை தொடரப்படாது என்று தேசிய சட்டத்துறை தலைவரின் முடிவை எதிர்த்து மலேசிய வழக்கறிஞர் மன்றம் செய்த விண்ணப்பத்தை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

யாயாசான் அகால் புடி அறவாரியம் தொடர்பான ஊழல், நம்பிக்கை மோசடி, கள்ளப்பண பறிமாற்றம் ஆகியவையை உட்படுத்திய 47 குற்றச்சாட்டுகளை நடப்பு துணைப்பிரதமராக இருக்கும் அமாட் ஜாஹிட் ஹமி எதிர்நோக்கி வருகிறார்.

இந்த விண்ணப்பம் தொடர்பான சில சட்ட சிக்கல்களைக் கூட்டரசு நீதிமன்றத்தின் வாயிலாக வழிவிடப்பட வேண்டும் என்பதற்காக வழக்கறிஞர் மன்றம் மேற்கொண்ட விண்ணப்பத்தை நீதிபதி டத்தோ அமார்ஜித் சிங் நிராகரித்தார்.

அதுமட்டுமல்லாமல், நீதிமன்ற நீதித்துறையின் சட்டம் செக்‌ஷன் 96யின் கீழ் தேசிய சட்டத்துறை தலைவரின் முடிவை எதிர்க்கும் தகுதியை வழக்கறிஞர் மன்றம் கொண்டிருக்காத நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நீதிபதி தரப்பு விளக்கம் அளித்தது.

இந்நிலையில் தேசிய சட்டத்றை தலைவருக்கு வழக்கறிஞர் மன்றம் 10 ஆயிரம் ரிங்கிட் அபராதத் தொகையைச் செலுத்த வேண்டும் என்று உத்தவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here