நாட்டில் டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் அதிகரிப்பு

நாட்டில் டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் சடுதியாக அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் புதியதாக 5 பேர் டிங்கி காய்ச்சல் காதனமாக மரணமடைந்துள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டாக்டர் முஹமட் ராட்சி அபு ஹசான் தெரிவித்தார்.

கடந்த ஜூன் 9 முதல் 15 வரையிலான வாரத்தில் டிங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,900 ஆக அதிகரித்துள்ளது.
இது முந்தைய வாரத்தில் 2,508 சம்பவங்களாக பதிவாகியுள்ளது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 54,139 பேர் டிங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தனர், ஆனால் இவ்வாண்டு அதன் எண்ணிக்கை 70,037ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இந்தாண்டு இதுவரை டிங்கி காய்ச்சலால் 53 மரண சம்பவங்கள் பதிவாகியுள்ளன அதேநேரம்
கடந்த ஆண்டு 39 மரண சம்பவங்கள் பதிவாகியது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here