அஷ்ட சிரஞ்ஜீவிகள்

புராணங்களில் எத்தனையே கதாபாத்திரங்கள் இருந்தாலும் குறிப்பிட்ட 8 பேருக்கு மட்டும் சிரஞ்ஜீவியாக இருக்கும் படி வரம் அளிக்கப்பட்டது எதற்காக? இவர்கள் கலியுகத்திலும் அருவமாக வாழ்ந்து வருவதற்கு என்ன நோக்கம்? அஷ்டசிரஞ்ஜீவிகளின் அவதாரத்தின் நோக்கம் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இந்து புராண கதைகளின்படி, அஷ்ட சிரஞ்ஜீவிகள் எனப்படும் எட்டு பேர் இன்னும் இந்த பூமியில் மனிதர்களுடன் வாழ்ந்து வருவதாக சொல்லப்படுகிறது. சிரஞ்ஜீவி என்ற சொல்லுக்கு அழிவில்லாதவன் அல்லது மரணம் இல்லாதவன் என்று பொருள். மூலிகைகளில் மரணம் இல்லாத வாழ்வை தரக்கூடிய வலிமை பெற்றது சஞ்ஜீவி மூலிகை என சொல்லப்படுகிறது. சஞ்ஜீவி என்ற சொல்லில் இருந்து தோன்றியதே சிரஞ்ஜீவி என்பதாகும். அனுமான், அஸ்வத்தாமன், மகாபலி, கிருபாச்சாரியார், விபீஷணர், வியாசர், பரசுராமர், மார்கண்டேயர் ஆகிய எட்டு பேரும் சிரஞ்ஜீவியாக வாழும் வரம் பெற்றவர்கள் என புராணங்கள் சொல்கின்றன.

சிரஞ்ஜீவிகளின் பலம்

* அனுமன் – ராம பக்திக்கு உதாரணமாக போற்றப்படும் அனுமான் உடல் வலிமையிலும், வீரத்திலும் சிறந்தவர்.

* அஸ்வத்தாமன் – சிவனிடம் பெற்ற வரத்தால் பிறந்தவர்கள் என்பதால் அவரின் குணங்களும், பலமும் மிக்கவர். இவர் சிவனின் 11 ருத்ர அவதாரங்களில் ஒருவராக கருதப்படுகிறது. கிருஷ்ணரின் சாபத்தால் மரணம் இல்லாத வாழ்வை பெற்றவர்.

* மகாபலி – பிரகலாதனின் பேரனனா மகாபலி, மகாவிஷ்ணுவின் வாமன அவதாரத்தின் போது, பெருமாளிடம் இருந்து சிரஞ்ஜீவி வரம் பெற்றவர். அது மட்டுமின்றி, அடுத்த யுகத்தில் சொர்க்கத்தை ஆட்சி செய்யும் இந்திர பதவி கிடைக்கும் வரத்தையும் பெற்றவர்.

* கிருபாச்சாரியார் – மகாபாரதத்தில் கெளரவர்கள் பக்கம் உயிர் பிழைத்த அஸ்வத்தாமன் மற்றும் கிருதவர்மா ஆகியோருடன் உயிர்பிழைத்தவர்களில் இவரும் ஒருவர். இவரும் கலியுகம் முடியும் வரை வாழும் வரம் பெற்றவர்.

  • விபீஷணன் – ராவணனின் சகோதனான விபீஷணன், சீதையை மீட்க ராமருக்கு உதவியவர். ராம அவதாரம் முடிந்து திரும்பிய மகாவிஷ்ணு, பூமியை உண்மை மற்றும் தர்மத்தின் வழிநடத்துவதற்காக பூமிலேயே இருக்கும் படி கேட்டுக் கொண்டார்.

    * வியாசர் – மகாபாரத காவியத்தை எழுதிய வியாசரும், மகாவிஷ்ணுவின் அவதாரமாக கருதப்படுகிறார். ஞானம், கல்வியை வழிநடத்துவதற்காக இப்போதும் இவர் பூமியில் வசிப்பதாக நம்பப்படுகிறது.

    * பரசுராமர் – மகாவிஷ்ணுவின் 6வது அவதாரமான பரசுராமர், கல்கியின் குருவாக இருப்பார் என சொல்லப்படுகிறது. இவரும் கலியுகம் முடியும் சமயத்தில் பூமியில் மீண்டும் தோன்றுவார் என சொல்லப்படுகிறது.

    * மார்கண்டேயர் – இவர் சிவனிடம் இருந்து சிரஞ்ஜீவி வரம் பெற்றவர். சிவனிடம் வரம் பெற்று பிறந்தவர் என்பதால் சிவனின் பரிபூரண அருளை பெற்றவர் இவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here