இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் இரா. சம்பந்தன் காலமானார்

கொழும்பு:

லங்கையில் முதுபெரும் தமிழர் தலைவர் இரா. சம்பந்தன் காலமானார். அவருக்கு வயது 91.

இலங்கைத் தமிழர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த அவர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவராக விளங்கினார். இவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவராகவும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகவும் செயல்பட்ட சம்பந்தன், உடல்நலக்குறைவால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 30) காலமானதாகத் தெரிவிக்கப்பட்டது.

2015ஆம் ஆண்டு முதல் 2018 வரை அவர் இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றினார்.

கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்த அவர், இலங்கைத் தமிழர்களின் உரிமைகளுக்காகத் துணிச்சலுடன் குரல் கொடுத்தவர்.

2009ல் இலங்கையில் போர் முடிவுக்கு வந்தபிறகு தமிழர்களுக்குச் சம உரிமை வேண்டும் என்று எப்போதும் வலியுறுத்தியவர் இரா. சம்பந்தன் என்பது நினைவுகூரத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here