ரொனால்டோவை ஓரம் கட்டிய டியாகோ கோஸ்டா.. பெனால்டி ஷூட் அவுட்டில் போர்ச்சுகல் வெற்றி

முன்னதாக நடந்த போட்டியில் கூடுதலாக 30 நிமிடங்கள் அளிக்கப்பட்டும் இரண்டு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. இதை அடுத்து போட்டி பெனால்ட்டி ஷூட் அவுட்டுக்கு சென்றது. இந்த போட்டியில் என்ன நடந்தது?

ஃபிரான்க்புர்ட்: 2024 யூரோ கோப்பையில் போர்ச்சுகல் மற்றும் ஸ்லோவேனியா ஆகிய அணிகளுக்கு இடையேயான ரவுண்ட் ஆஃப் 16 போட்டியில் பெனால்ட்டி ஷூட் அவுட் முறையில் வெற்றியாளர் தீர்மானிக்கப்பட்டார். பெனால்ட்டி ஷூட் அவுட்டில் போர்ச்சுகல் அணி 3 – 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

2024 யூரோ கோப்பை தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் போர்ச்சுகல் அணியும் ஸ்லோவேனியா அணியும் மோதின. இந்த போட்டியில் போர்ச்சுகல் எளிதாக வெற்றி பெறும் என்று அனைவரும் எண்ணினர். போட்டி நேரமான முதல் 90 நிமிடங்களில் இரண்டு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. இதை அடுத்து 30 நிமிடங்கள் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.

அதில் போர்ச்சுகல் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, பெர்னாண்டஸ் மற்றும் ஸில்வா ஆகிய மூவரும் ஒரு கோல் அடித்தனர். போர்ச்சுகல் அணியின் கோல் கீப்பர் டியாகோ கோஸ்டா மிகவும் திறமையாக ஸ்லோவேனியா அடித்த ஷூட் அவுட்களை பிடித்தார். அதனால் அந்த அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இதை அடுத்து போர்ச்சுகல் ஷூட் அவுட் முறையில் 3 – 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது. கால் இறுதி சுற்றில் போர்ச்சுகல் அணி பிரான்ஸ் அணியை சந்திக்கிறது.

அதிலும் இரண்டு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. 105வது நிமிடத்தில் ரொனால்டோவுக்கு ஒரு பெனால்ட்டி வாய்ப்பு கிடைத்தது. அதில் அவர் ஏமாற்றம் அளித்தார். 121 நிமிடங்களின் முடிவில் இரண்டு அணிகளும் கோல் அடிக்காததால் போட்டி பெனால்ட்டி ஷூட் அவுட்டுக்கு சென்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here