லண்டனுக்கு மூவ் ஆகும் அண்ணாமலை.. பல மாதங்கள் அங்கேயே தங்கி இருக்க முடிவு.. அடுத்து என்ன?

‎சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளிநாடு செல்ல உள்ளார். லண்டனில் அவர் சில நாட்கள் தங்கி இருக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு பாஜகவில் இருந்து நிர்வாகிகள் அடுத்தடுத்து நீக்கப்பட்டு வருகின்றனர். பாஜக தலைவர் அண்ணாமலை அடுத்தடுத்து பல நிர்வாகிகளை நீக்கி வருகின்றனர். கடந்த வாரம், சிந்தனையாளர் பிரிவின் மாநில பார்வையாளர் கல்யாணராமன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

அவர் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு மாநில தலைமையினை பற்றியும், கட்சிக்காக பணியாற்றுபவர்கள் மீதும் தகுந்த ஆதாரங்கள் இன்றி சமூக வலைதளங்களில் அவதூறுகளை பரப்பி வருகிறார் என்று நீக்கப்பட்டார். அதன்பின் பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச் செயலாளர் திருச்சி S.சூர்யா கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதால் மாநில தலைமையின் அறிவுறுத்தலின் படி கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார், என்று அண்ணாமலை அறிவித்தார்.

உட்கட்சி மோதல்: தமிழ்நாட்டில் அண்ணாமலை – தமிழிசை சௌந்தரராஜன் இடையே மோதல் நிலவி வருகிறது. தமிழ்நாட்டின் பாஜக செயல்பாடு குறித்து மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி அளித்துள்ளார். அதில்., நான் கட்சிக்காக கடுமையாக உழைக்க கூடியவர்கள். நான் உட்கட்சி ஐடி நிர்வாகிகளை எதிர்க்கிறேன். எச்சரிக்கிறேன். தலைவர்கள் யாராவது கருத்து சொன்னால் அவர்களை மோசமாக பேச வேண்டாம். கட்சியின் பிற தலைவர்கள் மீது தவறாக எழுதினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் மாநில தலைவராக எச்சரிக்கிறேன் என்றெல்லாம் விமர்சனம் வைத்தார்.

இந்த விவகாரம் தேசிய அளவில் கவனமும் பெற்றது. தமிழிசையை அழைத்து அமித் ஷா பேசும் அளவிற்கு நிலைமை மோசமானது. அதன்பின் அண்ணாமலை – தமிழிசை நேரில் சந்தித்து சமாதானம் ஆனார்கள். இந்த மோதலின் தொடர்ச்சியாக பாஜக தலைவர் அண்ணாமலை களையெடுப்புகளை தொடங்கி உள்ளார். ஆனால் அண்ணாமலை அதன்பின் செய்தியாளர்களை சந்திப்பதை தவிர்க்க தொடங்கினார். பெரிதாக செய்தியாளர் சந்திப்பு எதையும் அண்ணாமலை கொடுக்கவில்லை.

பிரேக்: இப்படி பல விஷயங்கள் நடக்கும் நிலையில்தான் அண்ணாமலை அரசியலில் கொஞ்சம் பிரேக் எடுக்க உள்ளாராம். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளிநாடு செல்ல உள்ளார். லண்டனில் அவர் சில நாட்கள் தங்கி இருக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இங்கிலாந்தில் இருக்கும் ஆக்ஸ்போர்டு பல்கலையில் அண்ணாமலை படிக்க உள்ளார். இது தொடர்பாக பிரபல தமிழ் ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் சர்வதேச அரசியல் என்ற படிப்பை படிக்க அண்ணாமலை செல்கிறார். அது சான்றிதழ் படிப்பு. சில மாதங்கள் அங்கு தங்கி படிக்க வேண்டும்.

இந்தியாவில் இருந்து 12 அரசியல் தலைவர்களை ஆக்ஸ்போர்ட் அழைப்பது வழக்கம். அப்படி அண்ணாமலைக்கு இந்த முறை தேர்வாகி உள்ளார். இதற்காக அங்கே செல்லவும் அண்ணாமலை 4-5 மாதங்கள் அங்கேயே இருக்க உள்ளார். ஆகஸ்ட் இறுதியில் லண்டன் செல்லும் அண்ணாமலை இந்த வருட கடைசி வரை அங்கேயே இருக்க போகிறார். இப்படி அண்ணாமலை வெளிநாடு செல்லும் 5 மாதங்கள் தமிழக பாஜகவிற்கு தலைவர் இருக்க மாட்டார். இதனால் கட்சி ரீதியான நடவடிக்கைகள் பாதிப்பு அடையும்.

இதன் காரணமாக அண்ணாமலை மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. அண்ணாமலை இல்லாத நேரத்தில் கட்சி செயல்கள் பாதிக்கும். இதனால் அவர் மாற்றப்படலாம் அல்லது தற்காலிக தலைவர் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதில் அண்ணாமலையின் வெளிநாடு பயணம் பற்றியும் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை மாற்றப்படலாம் அல்லது தற்காலிக தலைவர் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

அண்ணாமலை வெளிநாடு செல்லும் நிலையில் சமீபத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பாஜக தேசிய மூத்த தலைவர், மத்திய அமைச்சர் அமித் ஷாவை சென்று சந்தித்துள்ளார். தமிழ்நாடு பாஜகவில் நடக்கும் சில மோதல்கள், உட்கட்சி விவகாரங்கள், கட்சியில் இருக்கும் பிரச்சனைகள் பற்றி அமித் ஷா கேட்ட விளக்கத்தின் அடிப்படையில் தமிழிசை அவசரமாக சென்று இந்த விளக்கத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here