அவ்ளோ தான் உலகக்கோப்பையே போச்சு.. சோர்ந்து போன ரோஹித்.. அடுத்த நொடி நடந்த மேஜிக்

இந்த இறுதிப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 176 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக விராட் கோலி 76 ரன்கள் எடுத்தார். அக்சர் பட்டேல் 31 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார். அடுத்து ஆடிய தென்னாப்பிரிக்க அணி 14 வது ஓவரில் 14 ரன்களும், 15 வது ஓவரில் 24 ரன்களும் குவித்து ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. கிளாசன் அதிரடியாக 27 பந்துகளில் 52 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

மும்பை: 2024 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா உலகக்கோப்பை வென்றது. இந்த இறுதிப் போட்டியில் கடைசி ஓவரில் சூர்யகுமார் யாதவ் பிடித்த கேட்ச்சை எந்த ஒரு இந்திய ரசிகரும் மறக்க முடியாது. இந்த நிலையில் அந்த கேட்ச்சை பிடிக்க சூர்யகுமார் ஓடி வந்த அதே நேரத்தில் ரோஹித் சர்மாவும் ஓடி வந்தார். ஆனால், பந்து பவுண்டரி எல்லைக் கோட்டை தாண்டுவது போல வந்ததை பார்த்து அவர் சோர்ந்து போன வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அதன் பின் அந்த அணி விக்கெட்டுகளை இழந்து அழுத்தத்தில் இருந்தது. கடைசி ஓவரில் 16 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது தென்னாப்பிரிக்கா. அப்போது அந்த அணியின் டேவிட் மில்லர் கடைசி ஓவரின் முதல் பந்தை தூக்கி அடித்தார். அந்த பந்து சிக்ஸ் தான் என அனைவரும் நினைத்தனர். அப்போது சூர்யகுமார் யாதவ் ஒரு புறம் இருந்து பந்தை பிடிக்க ஓடி வந்தார். மறுபுறம் ரோஹித் சர்மாவும் ஓடி வந்தார். எனினும், ரோஹித் அதிக தூரத்தில் இருந்தார். இந்த நிலையில் சூர்யகுமார் பந்தை பிடிக்க சில வினாடிகள் இருக்கும் முன்பு ரோஹித் அது சிக்ஸ் தான் என்று எண்ணி தன் முட்டியில் கைகளை வைத்து கீழே குனிந்து விட்டார்.
நிச்சயமாக அது சிக்ஸ் தான், இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு என்று நினைத்து அவ்வாறு செய்திருக்கிறார். அடுத்த சில வினாடிகளில் சூர்யகுமார் யாதவ் ஒரு கையால் கேட்ச் பிடித்து, பின் மேலே தூக்கிப் போட்டுவிட்டு பவுண்டரி எல்லைக்கு வெளியே சென்றார். பின் மீண்டும் உள்ளே ஓடி வந்து பந்தை கேட்ச் பிடித்தார்.

இந்த காட்சியை ரசிகர் ஒருவர் தனது மொபைலில் வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்து இருக்கிறார். இந்த அற்புதமான கேட்ச்சின் காரணமாக டேவிட் மில்லர் ஆட்டம் இழந்தார். அடுத்து முக்கிய பேட்ஸ்மேன் யாரும் இல்லாத நிலையில் தென்னாப்பிரிக்க அணியால் கடைசி ஓவரில் 8 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதனால் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here