பிந்துலுவில் பேருந்து மோதியதில் முதியவர் உயிரிழப்பு

சிபு:

இன்று காலை பிந்துலுவில் மோட்டார் சைக்கிள் பேருந்து மீது விபத்துக்குள்ளானதில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.

பலியானவர் டாங் உஜூம்,61 என அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மைல் 12 ஜாலான் பிந்துலு-சாமலாஜுவில் சாலையில் நடந்த விபத்து குறித்து காலை 7.07 மணிக்கு தமக்கு அழைப்பு வந்தது என்றும், உடனே பிந்துலு நிலையத்தில் இருந்து மொத்தம் 16 தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது, ​​பாதிக்கப்பட்டவர் மற்றும் அவரது மோட்டார் சைக்கிள் பேருந்தின் முன் பகுதிக்கு அடியில் சிக்குண்டிருந்தனர்.

“இருப்பினும் பாதிக்கப்பட்டவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக துணை மருத்துவர்களால் அறிவிக்கப்பட்டது. சடலம் மேலதிக நடவடிக்கைக்காக காவல்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது,” என்று அது மேலும் கூறியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here