விசாரணை முடியும்வரை HRD Corp அதிகாரிகளை பணி இடை நீக்கம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை

புத்ராஜெயா:

ணக்கு தணிக்கை அறிக்கை முறைகேடுகள் தொடர்பில் MACC யின் விசாரணை முடியும்வரை HRD Corp அதிகாரிகளை பணி இடை நீக்கம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று மனிதவள அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ கைரூல் டிசாய்மி தாவூட் தெரிவித்தார்.

HRD Corpபின் நிதி தொடர்பாக பொதுக் கணக்குக் குழுவின் அறிக்கை தொடர்பில் பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது தொடர்பில் MACCயிடம் அதிகாரப்பூர்வமாக புகார் செய்யப்பட்டது. இனி MACC இது குறித்து விசாரணைகளை நடத்தும். எனவே விசாரணை நடப்பதால் HRD Corp பின் அதிகாரிகள் யாரையும் பணி நீக்கம் செய்ய வேண்டியது இல்லை.

அதே வேளையில் இந்த விவகாரம் குறித்து மனிதவள அமைச்சு உள்ளக விசாரணை நடத்தினால் மட்டுமே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here