இந்திய சமுதாய மேம்பாட்டிற்கு ஒற்றுமை அரசாங்கம் பாடுபடுகிறது, டத்தோ ரமணன் தகவல்

கவின்மலர்

பிரதமர்டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் இந்திய சமுதாய மேம்பாட்டிற்கு கூடுதல் நிதியாக 13 கோடி ரிங்கிட்டை வழங்கியுள்ளது என்று தொழில்

முனைவோர் மேம்பாடு, கூட்டுறவுத்துறை துணையமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

பிரிஃப்( BRIEF-i) எனப்படும் பேங்க் ராக்யாட் இந்தியர் தொழில் முனைவோர் நிதி திட்டத்தின் கீழ் 5 கோடி ரிங்கிட்டும்,தெக்குன் நேஷனல் வழி ஸ்புமி ( SPUMI ) திடடத்தின் கீழ் 3 கோடி ரிங்கிட்டும்,இந்திய பெண்களுக்கான சிறப்பு நிதி திட்டமான பெண் ( PENN ) திட்டத்தின் கீழ் 5 கோடி ரிங்கிட்டும் மொத்தம் 13 கோடி ரிங்கிட் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

ஸ்புமி திட்டத்தின் கீழ் 2008 ஆம் ஆண்டு தொடங்கி 2024 ஆம் ஆண்டு வரை எந்த ஆண்டும் 2 கோடி ரிங்கிட்டிற்கு மேல் நிதி ஒதுக்கீடு இருந்தது இல்லை.
ஆனால் இன்றைய அரசு மொத்தம் 6 கோடி ரிங்கட்டை ஒதுக்கீடு செய்துள்ளது.

இதற்கு முன் “பெண்” திட்டத்தின் கீழ் 2 கோடி ரிங்கிட் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

தற்போது மடானி அரசாங்கத்தின் கீழ் மேலும் 5 கோடி ரிங்கிட் கூடுதலாக ஒதுக்கப்பட்டு மொத்தம் 7 கோடி ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சுங்கை பாக்காப்பில் நடைபெற்ற இந்திய தொழில் முனைவோர்கள் உடனான சந்திப்புக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டத்தோ ரமணன் இத்தகவல்களை வெளியிட்டார்.

முந்தைய அரசாங்கங்களுடன் ஒப்பிடும் போது டத்துஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கமே இந்திய சமுதாய மேம்பாட்டிற்கு இவ்வளவு பெரிய நிதி ஒதுக்கீட்டை செய்துள்ளது.

எனவேஇந்திய சமுதாயம் இத்திட்டங்களில் விடுபடாமல் இருக்க விரைந்துப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

ஸ்புமி திட்டத்தின் கீழ் மொத்தம் 25ஆயிரத்து 559 இந்திய தொழில் முனைவோர் 45.77 கோடி ரிங்கிட்டை நிதி உதவியாகப் பெற்றுள்ளனர்.

அவர்களில் பினாங்கைச் சேர்ந்த 1,698 தொழில் முனைவோர் 3.15 கோடி ரிங்கிட்டைப் பெற்றுள்ளனர்.

அது போலவே ஸபுமி கோஸ் பிக் திட்டம் கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது முதல் 27 லட்சத்து 80 ஆயிரம் ரிங்கிட் மொத்தம் 106 விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.மேலும் 30 பேரின் விண்ணங்கள் பரிசீலனையில் உள்ளது.

இத்திட்டங்கள் அனைத்தும் நாட்டின் சமுக பொருளாதார உருமாற்ற திட்டத்திற்கு ஏற்பவும் இந்திய சமுதாயத்தை மேம்படுத்தவும் அமைந்துள்ளது என்று அவர் சொன்னார்.

இந்திய சமுதாய பெரும் மாற்றத்திற்கும் மேம்பாட்டிற்கும் ஒற்றுமை அரசாங்கம் பணியாற்றி வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக அவர் கம்போங் லீமா கொங்சி என்னுமிடத்தில் நடைபெற்ற தொழில் முனைவோர் மேம்பாடு, கூட்டுறவு மடானி சந்தையைப் பார்வையிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here