கடைசி நிமிடத்தில் ஷாக் கொடுத்த ஈகுவடார்.. பெனால்டி வாய்ப்பை கோட்டைவிட்ட மெஸ்ஸி.. யாருக்கு வெற்றி?

நியூயார்க், கோபா அமெரிக்கா தொடரின் காலிறுதிப் போட்டியில் ஈகுவடார் அணியை பெனால்டி ஷூட் அவுட் மூலமாக அர்ஜெண்டினா அணி வீழ்த்தி அசத்தியுள்ளது. இதன் மூலம் கோபா அமெரிக்கா தொடரின் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி அர்ஜெண்டினா அணி சாதனை படைத்துள்ளது.

48வது கோபா அமெரிக்கா தொடரின் காலிறுதி சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று நடந்த முதல் காலிறுதியில் பலம் வாய்ந்த அர்ஜெண்டினா அணியை எதிர்த்து ஈகுவடார் அணி விளையாடியது. இந்த போட்டியில் நட்சத்திர வீரர் மெஸ்ஸி அணிக்கு திரும்பினார். தொடக்கம் முதலே அர்ஜெண்டினா அணி கோல் அடிக்க தீவிரமாக இருந்தது.
இதன் பலனாக 35வது நிமிடத்தில் அர்ஜெண்டினா அணியின் லிசாண்ட்ரோ மார்ட்டினஸ் முதல் கோலை அடித்து அசத்தினார். இதனால் அர்ஜெண்டினா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதன்பின் முதல் பாதி ஆட்டம் முடிவடைந்த நிலையில், 2ஆம் பாதியில் ஈகுவடார் அணி கோல் அடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது.

ஈகுவடார் அணியும் அடுத்தடுத்து கோல் அடிக்க முயற்சிகள் மேற்கொண்டு, அர்ஜெண்டினா அணியின் டிஃபென்ஸை தகர்க்க முடியவில்லை. கிட்டத்தட்ட 2ஆம் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்த நிலையில், கூடுதல் நேரத்தில் ஈகுவடார் அணியின் கெவின் ரோட்ரிக்ஸ் கோல் அடித்து அதிர்ச்சி கொடுத்தார். இதனால் ஆட்டம் 1-1 என்ற கணக்கில் முடிவுக்கு வந்தது. இதனால் பெனால்டி ஷூட் அவுட் மூலமாக வெற்றியாளரை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. அர்ஜெண்டினா அணி தரப்பில் முதல் பெனால்டி வாய்ப்பில் மெஸ்ஸி கோல் அடிக்க தவறினார். இதன்பின் ஈகுவடார் அணியும் முதல் பெனால்டியில் கோல் அடிக்க தவறியது. பின்னர் அர்ஜெண்டினா அணியின் ஆல்வரஸ் முதல் கோல் அடிக்க, மறுபுறம் ஈகுவடார் அணி 2வது வாய்ப்பையும் தவறவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here