ஜெர்மனியை சொந்த மண்ணிலேயே கதற வைத்த ஸ்பெயின்!

பெர்லின், யூரோ கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதிப் போட்டியில் ஜெர்மனி அணியை 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணி வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. சொந்த மண்ணில் நடந்த யூரோ கோப்பை தொடரில் தோல்வியடைந்து ஜெர்மனி அணி வெளியேறியதால், ரசிகர்கள் கண்ணீர்விட்டு சோகத்தை வெளிப்படுத்தினர்.

இதனால் முதல் பாதி ஆட்டம் முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்காமல் முடிவுக்கு வந்தது. பின்னர் 2ஆம் பாதி ஆட்டம் பரபரப்புடன் தொடங்கியது. அந்த பரபரப்புடன் சேர்த்து 51வது நிமிடத்தில் யமல் கொடுத்த பாஸை, சப்ஸ்ட்டிட்யூடாக வந்த டேனி ஓல்மோ அற்புதமாக கோலாக்கினார். இதனால் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இதன்பின் ஜெர்மனி அணியின் அட்டாக் அடுத்த கட்டத்திற்கு சென்றது.
கிட்டத்தட்ட ஸ்பெயின் அணி வெற்றி உறுதி என்று பார்க்கப்பட்ட நிலையில், 87வது நிமிடத்தில் ஜெர்மனி அணியின் விர்ட்ஸ் கோல் அடித்து மிரட்டினார். இதன் காரணமாக ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிவடிந்தது. இதன்பின் கூடுதலாக 30 நிமிடங்கள் அளிக்கப்பட்டது. அதில் முதல் 15 நிமிடங்கள் இரு அணிகளாலும் ஒரு கோலை கூட அடிக்க முடியவில்லை. அதன்பின் 107வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர்முசியாலா அடித்த பந்து ஸ்பெயின் வீரர் மார்க் கையில் அடித்தது. ஹேண்ட் பால் என்று தெரிய வந்த நிலையில், பெனால்டி வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதனால் போட்டி கூடுதல் பரபரப்பு ஏற்பட்டது.

யூரோ கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதி போட்டியில்  ஸ்பெயின் – ஜெர்மனி அணிகள் விளையாடின. 2008ஆம் ஆண்டு நடந்த யூரோ இறுதிப்போட்டியில் ஜெர்மனி அணி 1-0 என்ற கணக்கில் ஸ்பெயின் அணியிடம் தோல்வியை சந்தித்தது. இதற்கு சொந்த மண்ணில் வைத்து ஜெர்மனி அணி பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்புடன் ஆட்டம் தொடங்கியது. தொடக்கம் முதலே இரு அணிகளும் அட்டாக்கிங் பாணியில் விளையாடியதால், ஆட்டம் பரபரப்பானது.

இதனால் முதல் பாதி ஆட்டம் முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்காமல் முடிவுக்கு வந்தது. பின்னர் 2ஆம் பாதி ஆட்டம் பரபரப்புடன் தொடங்கியது. அந்த பரபரப்புடன் சேர்த்து 51வது நிமிடத்தில் யமல் கொடுத்த பாஸை, சப்ஸ்ட்டிட்யூடாக வந்த டேனி ஓல்மோ அற்புதமாக கோலாக்கினார். இதனால் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இதன்பின் ஜெர்மனி அணியின் அட்டாக் அடுத்த கட்டத்திற்கு சென்றது. கிட்டத்தட்ட ஸ்பெயின் அணி வெற்றி உறுதி என்று பார்க்கப்பட்ட நிலையில், 87வது நிமிடத்தில் ஜெர்மனி அணியின் விர்ட்ஸ் கோல் அடித்து மிரட்டினார்.
தொடர்ந்து 118வது நிமிடத்தில் ஓல்மோ கொடுத்த கிராஸை, மைக்கில் மரினோ 3 அடிக்கு உயரத்திற்கு எகிறி குதித்து அசாத்திய ஹெட்டர் மூலமாக கோலாக்கினார். இதன் மூலமாக ஸ்பெயின் அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இதனை மைதானத்தில் இருந்து பார்த்த ஜெர்மனி ரசிகர்கள் கண்ணீர் சிந்தத் தொடங்கினர். இருப்பினும் ஜெர்மனி அணிக்கு கடைசி நிமிடத்திலும் கோல் அடிக்க கிடைத்த வாய்ப்பையும் வீணடித்தது. இதனால் சொந்த மண்ணிலேயே ஜெர்மனி அணி தோல்வியடைந்து வெளியேறியுள்ளது.

இதன் காரணமாக ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிவடிந்தது. இதன்பின் கூடுதலாக 30 நிமிடங்கள் அளிக்கப்பட்டது. அதில் முதல் 15 நிமிடங்கள் இரு அணிகளாலும் ஒரு கோலை கூட அடிக்க முடியவில்லை. அதன்பின் 107வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர்முசியாலா அடித்த பந்து ஸ்பெயின் வீரர் மார்க் கையில் அடித்தது. ஹேண்ட் பால் என்று தெரிய வந்த நிலையில், பெனால்டி வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதனால் போட்டி கூடுதல் பரபரப்பு ஏற்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here