மணிப்பூரில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார் ராகுல் காந்தி

இம்பால்:

மணிப்பூர் மாநிலம் தலைநகர் இம்பாலில் உள்ள ஜிரிபாம் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை ராகுல் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

அசாம் மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால், சுமார் 24 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரம்மபுத்திரா மற்றும் அதன் துணை நதிகளில் அபாய அளவைத் தாண்டி தண்ணீர் பாய்ந்து வருகிறது. இதுவரை 55க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இன்று(ஜூலை 08) அசாம் மாநிலத்திற்கு சென்ற ராகுல், பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். பின்னர் அவர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்தார். அப்போது அடிப்படை வசதிகள் அனைத்தும் சரியாக கிடைக்கிறதா? என மக்களிடம் ராகுல் கேட்டறிந்தார்.

இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் ராகுல் வெளியிட்டுள்ள பதிவில்,” நான் அசாம் மக்களுடன் நிற்கிறேன். பார்லிமென்டில் நான் அவர்களின் சிப்பாய். அசாமில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு அதீத பேரழிவு மன வேதனையை ஏற்படுத்துகிறது.
வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஓராண்டிற்கும் மேலாக வன்முறை நிலவி வரும் மணிப்பூர் மாநிலத்திற்கு இன்று(ஜூலை 08) ராகுல் சென்றார். தலைநகர் இம்பாலில் உள்ள ஜிரிபாம் நிவாரண முகாமிற்கு சென்று, மக்களை ராகுல் சந்தித்தார். கடந்தாண்டு மே 3ம் தேதி முதல் மணிப்பூரில் மெய்டி மற்றும் கூகி சமூக மக்களுக்கு இடையே கலவரம் நடந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here