குலதெய்வம் வீடு தேடி வர, கேட்டது கிடைக்க பஞ்சமியில் இதை பண்ணுங்க

வாராஹிக்கே உரிய ஆஷாட நவராத்திரியில் வரும் பஞ்சமி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த நாளில் அம்பிகையை வழிபடுவது அனைத்து விதமான மங்கலங்களையும் வாழ்வில் நிறைய செய்யும். என்ன கோரிக்கையை முன் வைத்தாலும் அதை வாராஹி நிச்சயம் நிறைவேற்றி தருவாள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ஆஷாட நவராத்திரியில் பஞ்சமி வழிபாடு :

தற்போது வாராகி அம்மனை வழிபட்டு, அவளின் அருளை முழுவதுமாக பெறுவதற்குரிய ஆஷாட நவராத்திரி நடந்து வருகிறது. இந்த ஆண்டு ஆஷாட நவராத்திரி ஜூலை 06 ம் தேதி துவங்கி உள்ளது. ஆஷாட நவராத்திரியின் 10 நாட்களும் வாராஹியை வழிபட முடியாதவர்கள் வாராஹிக்கு உரிய பஞ்சமி திதியில் மட்டுமாவது ஒரே ஒரு எளிமையான வழிபாட்டினை செய்தாலே வாராஹி தன்னுடைய அருளை வாரி, உங்கள் வீட்டில் உள்ள சுபகாரியத் தடைகள், பிரச்சனைகள் அனைத்தையும் தீர்த்து வைப்பாள். குறிப்பாக குல தெய்வம் தெரியாதவர்கள், குல தெய்வ தடை உள்ளவர்கள் ஆஷாட நவராத்திரியில் வரும் பஞ்சமியில் வழிபட்டால் குலதெய்வத்தை வீடு தேடி வரவைப்பாள் வாராஹி.

பஞ்சமி திதி  ஜூலை 09ம் தேதி புதன்கிழமை, வீட்டில் வாராஹி சிலை இருந்தால் பால், பன்னீர், சந்தனம், தயிர், பஞ்சாமிர்தம், தேன் போன்ற பொருட்களால் அபிஷேகம் செய்யலாம். சிலை வைத்திருப்பவர்கள், அப்படி இல்லாதவர்கள் வாராஹி படம் இருந்தாலும், இல்லா விட்டாலும், ஒரு மனைப்பலகையில் பித்தளை தட்டு அல்லது வாழை இலை ஒன்றை வைத்து வெற்றிலை வைத்து, அதன் மீது அக்ஷதை, மஞ்சள், குங்குமம் ஆகியவற்றை கலந்து, அதன் மீது வாராஹியை எழுந்தருளச் செய்ய வேண்டும். வாராஹிக்கு விருப்பமான கிழங்கு, பழ வகைகள் படைத்து வழிபடலாம். வாராஹியின் 108 போற்றி அஷ்டோத்திர சத நாமாவளி மற்றும் வாராஹி கவசம் ஆகியவற்றை படித்து வழிபட வேண்டும்.

குல தெய்வத்தை வீட்டிற்கு வரவைக்க :

வாராஹியை வழிபட்ட பிறகு, 11 அல்லது 21 சுமங்கலிகள் அல்லது எத்தனை பேருக்கு முடியுமோ அத்தனை சுமங்கலிகளை வீட்டிற்கு அழைத்து, அவர்களுக்கு புடவை வாங்கிக் கொடுத்து, அதை உடுத்தி வரச் சொல்லுங்கள். பிறகு அவர்களுக்கு பூ, குங்குமம் கொடுத்து வைத்துக் கொள்ள சொல்லுங்கள். பிறகு வாழை இலை போட்டு, வீட்டில் சமைத்த உணவுகளை அவர்களுக்கு பரிமாறி, நிறைவாக சாப்பிட வையுங்கள். சாப்பிட்ட பிறகு வெற்றிலை, பாக்கு கொடுத்து அதை சாப்பிட சொல்லுங்கள். சுமங்கலிகள் வெற்றிலை போடுவது சிறப்பானது.

பிறகு அவர்களுக்கு முழு தேங்காய், பழம், திருமாங்கல்ய கயிறு, ரவிக்கை துணி, வளையல், வெற்றிலை பாக்கு போன்ற மங்கல பொருட்களை கொடுத்து அனுப்பி வைக்க வேண்டும். சுமங்கலிகள் வயதில் பெரியவர்களாக இருந்தால் அவர்களுக்கு பாத பூஜை செய்து, ஆசி பெறலாம். சுமங்கலி பெண்களுடன் ஒரே ஒரு கன்னிப் பெண்ணிற்கும் இதே போல் வீட்டிற்கு அழைத்து, சாப்பாடு போட்டு மங்கல பொருட்கள் கொடுப்பது கூடுதல் சிறப்பானதாகும். அதுவும் பஞ்சமி திதியில் இந்த பரிகாரத்தை செய்வது மிகவும் சிறப்பானதாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here