மென்செஸ்டர் யுனைடெட் ரசிகர்களுக்காக மலேசியன் ஏர்லைன்ஸின் சிறப்புப் போட்டி

கோலாலம்பூர்:

காற்பந்து ரசிகர்களுக்கு ஒரு அருமையான வாய்ப்பு.
மான்செட்டர் யுனைடெட்டின் ஆட்டத்தை நேரலையில் காணவேண்டுமா? அதற்கு ஓல்ட் டிராஃபோர்டுக்குச் செல்லும் வாய்ப்பை மலேசிய ஏர்லைன்ஸ் உங்களுக்கு வழங்குகிறது.

அதே வேளையில் பிரத்யேக விஐபிகளுக்கான இடத்திலிருந்து ஆட்டத்தை காண எட்டுப் பேருக்கு வாய்ப்பு கிடைக்கவுள்ளது.

இப்போட்டியில் வெற்றி பெற்றால் வாழ்நாளில் ஒருமுறை இந்த நம்பமுடியாத வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கிறது.

இதற்கான இறுதி நாள் ஜூலை 13 ஆகும்.

கடந்த மார்ச் 22ஆம் தேதி மலேசியா ஏர்லைன்ஸ் மென்செஸ்டர் யுனைடெட் உடனான உலகளாவிய கூட்டாண்மையை அறிவிப்பதில் பெருமிதம் கொள்வதாக அறிவித்தது.

அதன் அதிகாரப்பூர்வ பங்காளியாக மலேசிய ஏர்லைன்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் உலகெங்கிலும் உள்ள மென்செஸ்டர் யுனைடெட் ரசிகர்களை தங்களுக்குப் பிடித்த கால்பந்து கிளப்புடன் இணைப்பதில் மலேசிய ஏர்லைன்ஸ் அர்ப்பணிப்பில் ஒரு மைல்கல்லாக இருக்கிறது.

மேலும் இந்த ஒப்பந்தம் மலேசியா ஏர்லைன்ஸின் உலகளாவிய இருப்பை மேம்படுத்துகிறது.

அதுமட்டுமன்றி, மென்செஸ்டர் யுனைடெட் ரசிகர்களுக்கு தனித்துவமான அனுபவங்களையும் பிரத்தியேகமாக வழங்குகிறது.

இந்தப் போட்டியின் படிமுறைகளாக முதலில் மலேசியா ஏர்லைன்ஸ் முகநூல் பக்கத்தைப் பின்தொடர வேண்டும்.

மேலும் போட்டி பதிவுகளை லைக் செய்யவும். பின்னர் ஓல்ட் டிராபோர்டில் ஒரு விளையாட்டைக் காண நீங்கள் ஏன் மலேசியா ஏர்லைன்ஸில் பறக்க விரும்புகிறீர்கள்? என்ற கேள்விக்குப் பதிலளிக்க வேண்டும்.

உங்கள் கருத்துகளில் ஏழு நண்பர்களைக் குறிக்கவும், ஒவ்வொரு நண்பரும் உங்கள் கருத்துக்குக் கீழ் அவர்களுக்குப் பிடித்தமான மென்செஸ்டர் யுனைடெட் வீரரைக் குறிப்பிட வேண்டும். பின் கூடுதல் நுழைவுக்காக போட்டி பதிவை உங்கள் முகநூலில் பகிர வேண்டும்.

மேலும் தகவல், போட்டியின் முழு விவரங்களுக்கு, அதிகாரப்பூர்வ மலேசியன் ஏர்லைன்ஸ் முகநூல் பக்கத்தைப் பார்வையிடலாம் என்று மலேசிய ஏர்லைன்ஸ் வெளியிட்ட ஓர் அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here