பழைய இரும்பு பொருட்களை ஏற்றி சென்ற லோரி கவிழ்ந்ததில் ஓட்டுநர் பலி

குவா மூசாங்கில் நடந்த விபத்தில் லோரி ஓட்டுநர்  ஒருவர் கொல்லப்பட்டார். இந்த விபத்து  70ஆவது கி.மீட்டர் ஜாலான் குவா மூசாங்கில்  காலை 8.40 மணியளவில் நடந்ததாக குவா மூசாங் மாவட்ட காவல்துறைத் தலைவர்  சிக் சூன் ஃபூ தெரிவித்தாக நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

27 வயதான லோரி டிரைவர், பழைய இரும்புப் பொருட்களை கொண்டு செல்லும் போது வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது. இதன் விளைவாக, லோரி சாலையின் வலதுபுறத்தில் தரையிறங்குவதற்குள் சறுக்கி விழுந்ததில் லோரி ஓட்டுநர் பலியானார். இருப்பினும் அவரது உதவியாளர் பலத்த காயம் அடைந்து உடனடியாக கோல க்ராய் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here