வளர்பிறை சஷ்டி விரத நன்மைகள்

சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பதால் பலரும் குழந்தை இல்லாதவர்கள், குழந்தை வரம் வேண்டி மட்டும் தான் சஷ்டி திதியில் விரதம் இருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். வளர்பிறை சஷ்டியில் முருகனை வழிபட்டால் என்னவெல்லாம் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

திதிகளின் ஆறாவது திதியான சஷ்டி, ஆறுமுகக் கடவுளான முருகப் பெருமானை விரதம் இருந்து வழிபட்டு, அவரின் அருளை பெறுவதற்கான நாளாகும். ஐப்பசி மாதத்தில் வரும் கந்தசஷ்டியை, மகா கந்தசஷ்டி பெருவிழாவாக கொண்டாடுகிறோம். இந்த ஆறு நாட்களும் ஏராளமானவர்கள் விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபடுவது உண்டு. இது தவிர மாதந்தோறும் வரும் சஷ்டி திதிகளிலும் பலர், தங்களின் குறைகள் தீர விரதம் இருப்பது உண்டு.

வளர்பிறை, தேய்Aபிறை என மாதத்திற்கு இரண்டு சஷ்டி திதிகள் வருகின்றன. இந்த இரண்டிலுமே விரதம் இருப்பது சிறப்பானதாகும். பலரும் தேய்பிறை சஷ்டியில் விரதம் இருந்தால் தான் சிறப்பு என நினைக்கிறார்கள். ஆனால் வளர்பிறை சஷ்டியும் பல விதமான நன்மைகளை தரக் கூடிய முக்கிய விரத நாளாகும்.

சஷ்டி விரத முறை :

முருகனை வழிபடும் யாராக இருந்தாலும், எAன்ன கோரிக்கை நிறைவேற வேண்டும் என்றாலும், முருகனை மனதார வேண்டிக் கொண்டு சஷ்டி விரதத்தை இருக்கலாம். சஷ்டி விரதம் இருக்க துவங்குபவர்கள் வளர்பிறை சஷ்டியில் விரதம் மேற்கொள்ளலாம். சஷ்டி திதி வரும் நாட்களில் உண்ணாமல் உபவாசமாகவோ அல்லது பால் மற்றும் பழம் மட்டும் சாப்பிட்டோ விரதம் இருந்து, முருக மந்திரங்களை மனதார சொல்லி வழிபட்டு, முருகன் கோவிலுக்கு சென்று தரிசித்து வந்தாலே போதும், முருகனின் அருள் கிடைக்கும்.

சஷ்டி திதி, சில குறிப்பிட்ட நாட்களில், குறிப்பிட்ட திதிகளுடன் இணைந்து வரும் போது கூடுதல் சிறப்பு பெறுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் வரும் வளர்பிறை சஷ்டி, ஜூலை 11 ம் தேதி வியாழக்கிழமை வருகிறது. அன்றைய தினம் காலை 10.19 வரை பஞ்சமி திதியம், அதற்கு பிறகு சஷ்டி திதியும் வருகிறது. முருகப் பெருமானுக்குரிய வியாழக்கிழமையில் சஷ்டி திதி வருவது, அம்பிகை வழிபாட்டிற்குரிய பஞ்சமி திதியுடன் சேர்ந்தே வருவது கூடுதல் சிறப்பாகக் கருதப்படுகிறது.

சஷ்டி விரத பலன்கள் :​

தேய்பிறை சஷ்டியில் விரதம் இருந்தால் கஷ்டங்கள் தீரும் என்பது அனைவருக்கும் தெரியும். அதே போல் வளர்பிறை சஷ்டியில் விரதம் இருந்தால் வெற்றிகள், மகிழ்ச்சி, ஆன்மிகத்தில் வளர்ச்சி ஆகியவை கிடைக்கும். இந்த நாளில் முருகன் கோவில்களுக்கு சென்று வழிபட்டால் மகிழ்ச்சி, செல்வ வளம், அதிர்ஷ்டம் ஆகியவை ஏற்படும். வாழ்வில் எப்படிப்பட்ட தீய சக்திகளின் பிடியில் சிக்கி, கடுமையான துன்பத்தில் இருந்தாலும் வளர்பிறை சஷ்டியில் விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபட்டால் அதிலிருந்து விடுபட முடியும்.

முருகனின் அன்பை பெற :

மாதந்தோறும் வரும் சஷ்டி திதிகளில் விரதம் இருந்தால் சிறப்பான வாழ்வு அமையும். தடைகள் விலகும். மனதில் தைரியமும், பலரும் அதிகரிக்கும். அது மட்டுமின்றி முருகனுக்கும், நமக்கும் இடையேயான தொடர்பு அதிகப் பலப்படும். சஷ்டி திதியில், முழுமையாக முருகனை சரணடைந்து விரதம் இருப்பவர்கள் முருகனின் அருளுக்கும், உள்ளத்தின் அன்பிற்கும் நெருக்கமானவர்களாக ஆக முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here