விழுப்புரம்:
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க., வேட்பாளர் அன்னியூர் சிவா 1,24,053 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார். பா.ம.க., வேட்பாளரை விட, தி.மு.க., வேட்பாளர் 67,757 ஓட்டுக்கள் கூடுதலாக பெற்றார்.
பா.ஜ., உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பா.ம.க., 56,296 ஓட்டுக்கள் பெற்று 2வது இடத்தை பிடித்தது.
3வதுஇடத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி 10,602 ஓட்டுக்கள் மட்டும் பெற்று, டிபாசிட்டை இழந்தது.




















