டில்லியில் கட்டடம் இடிந்து 3 பேர் பலி!

புதுடில்லி:

டில்லியில் இரண்டு மாடி கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் 3 பேர் பலியாயினர்.

தலைநகர் டில்லியின் வடமேற்கு பகுதியான ஜஹாங்கிர்பூர் என்ற இடத்தில் 2 மாடி கட்டடம் கார்மென்ட் தொழிற்சாலையாக பயன்பாட்டில் இருந்து வந்ததாகவும் அங்கு கட்டடத்தின் ஒரு பகுதியில் மராமத்து பணி நடைபெற்று கொண்டிருந்த போது இடிந்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் 3 பேர் பலியாகினர். பலர் கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தகவலறிந்த தீயணைப்புபடையினர் மீட்புபணியை மேற்கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here