மலேசியர்களுக்காக தனி சமூக வலைத்தளம்: அரசு திட்டம்

கோலாலம்பூர்:

மலேசியர்களுக்கு மட்டும் தனித்துவமான சமூக வலைத் தளத்தை உருவாக்க அரசாங்கம் முயன்று வருவதாக தொடர்புத்துறை அமைச்சர் ஃபாமி ஃபாட்ஸில் தெரிவித்து உள்ளார்.

நடப்பில் உள்ள சமூக வலைத் தளங்கள் மலேசியர்கள் மூலம் அதிகம் சம்பாதித்தாலும், அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய அவை தவறுவதால் இந்த யோசனை பிறந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

“கடந்த ஆண்டு ஃபேஸ்புக் மட்டும் மலேசிய மக்கள் மூலம் US$600 மில்லியன் லாபம் ஈட்டியதாக மதிப்பிடப்படுகிறது. இருப்பினும், தங்களது தளத்தின் பயன்பாடு பாதுகாப்பானது என்பதை அவை உறுதி செய்கின்றனவா என்பதில் சந்தேகம் உள்ளது,” என்று அமைச்சர் கூறினார்.

மேலும் அவர், “சமூக வலைத் தளங்களின் கடப்பாடு போதவில்லை. எனவே, நிலைமையை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது என்றும், அரசாங்கம் சொந்த சமூக வலைத் தளத்தை உருவாக்குவது என்பது எளிதான செயல் அல்ல. “இருப்பினும், சில நாடுகள் அதனைச் சாதித்துள்ளன. அந்த சாத்தியத்தை அரசாங்கம் கவனித்துச் செயல்படும்,” என்று அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here