ஜெலி:
ஜெலி பெர்சத்து பிரிவின் 1,000க்கும் மேற்பட்ட தலைவர்களும் உறுப்பினர்களும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்து, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் தலைமைக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.
ஜெலியில் உள்ள எட்டு கிளைகள் மற்றும் 18 மகளிர் கிளைகளை சேர்ந்த உறுப்பினர்களை உள்ளடக்கிய இந்த முடிவு இன்று ஆகஸ்டு 7 ஆம் தேதி புதன்கிழமை அறிவிக்கப்பட்டதாக கெடாய் கோலா பாலா பெர்சாத்துவின் முன்னாள் துணைத் தலைவர் ரோட்ஸி முஹமட் தெரிவித்தார்.
மேலும் அந்த பெர்சத்து கிளையின் அனைத்து தலைவர்களும் உறுப்பினர்களும் ராஜினாமா செய்ததாகவும், கட்சியை விட்டு வெளியேறுவதற்கான முடிவு சுயமாக எடுக்கப்பட்டதாகவும், தாங்கள் எந்தக் கட்சியின் தூண்டுததாலும் இம்முடிவு எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
பெர்சத்து தலைமைத்துவத்தின்மீதான நம்பிக்கை தகர்க்கப்பட்டதாலும், தேசத்தின் உயர்வுக்காக போராடக்கூடிய மலாய்க்காரர்களின் மேலாதிக்க கூட்டணியாக ஒற்றுமை அரசாங்கத்தை தாங்கள் கருதுவதாலும் பெர்சத்து கட்சியை விட்டு விலகுவதாக அவர் சொன்னார்.